வீட்டில் வாஸ்து குறைபாட்டை உணர்த்தும் அசுப நிகழ்வுகள்
வாஸ்து என்பது ஒரு வீட்டின் மிக முக்கியமான ஒன்றாகும்.வாஸ்து சரி இல்லை என்றால் கட்டாயம் அந்த வீட்டில் உள்ள நபர்கள் பல்வேறு சிக்கல்கள் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.அப்படியாக ஒருவர் வீட்டில் வாஸ்து குறைபாட்டை குறிக்கும் அசுப நிகழ்வுகள் பற்றி பார்ப்போம்
1.உங்கள் வீட்டில் திடீர் பண பிரச்சனைகள் உருவாகும்.எதையும் சமாளிக்க முடியாத அளவிற்கு திடீர் நஷ்டம் ஏற்படும்.இவ்வாறு ஏற்பட்டால் கட்டாயம் உங்கள் வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.இதற்கு வீட்டின் தென்மேற்கு திசையில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
2.குடும்ப உறுப்பினர்களுக்கு திடீர் உடல் உபாதைகள் உருவாகலாம்.அடுத்து அடுத்து மருத்துவமனை செலவுகள் ஏற்பட்டால் நிச்சயம் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனை சரி செய்யவேண்டும்.
3.சிலருக்கு தூங்குவதில் மிக பெரிய சிக்கல் உருவாகும்.நிம்மதியான உறக்கம் என்பதே இருக்காது.அது வாஸ்து குறைபாடுகளின் அறிகுறியாகும். எனவே தூங்கும் அறையில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதை உடனே சரி செய்வது நன்மை அளிக்கும்.
4.ஒரு சில வீடுகளில் தேவை இல்லாத சண்டைகள் உருவாகும்.சமாதானமான மனநிலை இருக்காது.அவர்களை மீறி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவார்கள்.அவர்கள் வீட்டில் நிச்சயம் வாஸ்து குறைபாடு இருக்கும்.ஆக அதை முதலில் சரி செய்வில்லை என்றால் கட்டாயம் உறவுகளுக்கு இடையே பிரிவுகள் உண்டாகும்.
5.வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்றியும் எந்தவித காரணமும் இல்லாமல் திடீரென காய்ந்து விடும்.அதே போல் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் திடீர் என்று நோய்வாய் பட்டு அவஸ்தைக்கு உள்ளாகும்.இதுவும் வாஸ்து தோஷத்தின் அறிகுறியாகும்.
ஆக,வீட்டில் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டால் கட்டாயம் ஒரு நல்ல வாஸ்து நிபுணரை அழைத்து வீட்டில் இருக்கும் குறைபாட்டை சரி கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.கால தாமதம் செய்ய அது மிக பெரிய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |