கோவில் வழிபாடுகளில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
கோவில் வழிபாடுகளுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
* நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது பூக்கள் வாங்கி செல்வது வழக்கம். அதை பெரும்பாலும் கடைகளில் வாங்குவதை விட நம் கைகளால் பூக்கள் பறித்து கோர்த்து சமர்ப்பிப்பது நல்லது.
* விநாயகருக்கு தேங்காய் உடைப்பது நல்லது, ஆனால் மற்ற கடவுளுக்கு தேங்காய் உடைத்து அதை தாம்பூலத்தோடு வைத்து கொடுப்பது தான் சிறப்பாகும்
* வில்வ இலை சிவனுக்கு உகந்தது என்று அனைவரும் அறிந்த ஒன்று. அதை காலையில் ஒரு கை அளவு நமசியவா என்று சொல்லி வில்வ இலை சாப்பிட்டு வந்தால் கண் நோய், வயிற்று வலி ஆகியவை தீரும்.
* நாம் நதி ஏறி கரைகளில் நீராடும் போது அருகில் கோவில் இருந்தால் சன்னதியை நோக்கி நின்று குளிக்க வேண்டும். அப்படி செய்வதால் பாவங்கள் நீங்கி கோவிலுக்குள் சென்று தரிசித்து கிடைக்கும் அருள் நமக்கும் கிடைக்கும்.
* நம்முடைய ஞானம் வளர பௌர்ணமி தோறும் குருநாதரை வணங்கி வந்தால் அறிவு பெருகும் என்கிறார்கள்.
* அனுமன் வழிபாட்டுக்கு செவ்வாய், சனி உகந்த நாளாகும். அன்று திருமணம் ஆகாதவர்கள் "ஸ்ரீ ராமா ஜெயம்"கூறி வழிபட்டால் நிச்சயம் திருமணம் நடக்கும். மண வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும்.
* கோவிலுக்கு செல்லும்பொழுது உடன் யாரேனும் வந்தால் அழைத்து செல்லலாம் இல்லை தனியே செல்வது சிறப்பு. ஏனெனில் கூப்பிட்டு அவர் வராமல் போனால் மன கவலையுடன் கோவிலுக்கு செல்வது போல் அமைந்துவிடும்.
* கோவிலுக்கு செல்லும் பொழுது எப்பொழுதும் சந்தோஷமான மன நிலையில் செல்லவேண்டும் அப்பொழுது தான் இறை வழிபாடு திருப்தி தரும்.