தினம் ஒரு திருவாசகம்
யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே
விளக்கம்
இங்கே மாணிக்கவாசகர் கூறுவதை கவனித்து பார்க்கும் போது மாணிக்க வாசகரின் அன்பு பொய் என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ! என்று எண்ண தோன்றுகின்றது.
பொய்யான நம்முள் இருந்து அழுது,அழுது தினமும் தொழுது,தொழுது மெய்யைக் காண மாணிக்கவாசகரிடம் வேண்டுவோம்.
யானே பொய்மையானவன். எனது உள்ளாத்திலும் பொய்கள் உண்டு. இனிக்கும் தேனே! சுவையான அமுதே! கருப்பஞ் சாற்றின் தெளிவே! அடியவர்களுக்கு இனிக்கும் பெரியோனே! பொய்யனே ஆயினும், தீவினையுடைய யான் உள்ளம் கரைந்து, கண்ணீர் சிந்தி அழுதால் ஒருவேளை உன்னைப் பெறலாமோ? நாயேனாகிய யான் உன்னை வந்தடைய அருள்வாயாக!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |