மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது?
கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாதம் பிறக்க உள்ளது.மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம்.நினைத்தது நடக்க இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும்.அப்படியாக ஆன்மீக ரீதியாக மார்கழி மாதத்தில் சில விஷ்யங்களை செய்யலாம் சில விஷயங்களை செய்ய கூடாது என்று இருக்கிறது.நாம் இப்பொழுது அதை பற்றி பார்ப்போம்.
பிற மாதங்கள் காட்டிலும் மார்கழி மாதம் ஆக்சிஜன் அதிகம் நிறைந்த மாதம்.ஆக இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும் கேட்பதும் மிக சிறந்த பலனை கொடுக்கும். பொதுவாக மார்கழி மாதத்தில் திருமணம்,நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள்.
ஆனால் திருமணம் செய்வதற்கான வரன் பார்த்தால் ஜாதகம் பரிமாற்றம் செய்தல் போன்ற விஷயங்களை செய்யலாம்.அதே போல் மார்கழி மாதத்தில் புதுமனையில் குடிபுகுதல், வாடகை அல்லது ஒத்திக்கு வீடு மாறி செல்லுதல், புதிய அலுவலக கட்டடத்திற்கு மாறுதல் கூடாது.
ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார்.அதே போல் மார்கழி 30 நாளும் பெண்கள் அதிகாலை எழுந்து வீட்டில் அரிசிமாவால் கோலம் போடுவதால் சிறந்த பலன்களை பெறலாம்.அதே போல் மார்கழி மாதத்தில் விதை விதைக்க கூடாது என்று சொல்லுவார்கள்.
காரணம் மார்கழி மாதம் விதை வளர்வதற்கான உகந்த காலம் இல்லை அவ்வாறு விதைத்தால் அது சரியாக வளராது என்று சொல்வார்கள்.
மார்கழி மாதத்தில் தான் ஆண்டாள் விரதம் இருந்து பெருமாளை அடைந்தார்.ஆதலால் இந்த மாதத்தில் நினைத்து நடக்க ஆண்டாள் தாயாரை மனதார வழிபாடு செய்து வேண்டுதல் வைக்க அவை நிச்சயம் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |