உங்களுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டுமா?சித்தர் சொன்ன வழிபாடு
நம்மில் பல பேருக்கு திருமண தாமதம் இருக்கும் அவர்களுக்கு திருப்பதி சென்று அலமேலு மங்கையும் பெருமாளையும் தரிசித்து வர தடை பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும்.
அதாவது பிற கோயில்கள் போல திருப்பதியிலும் விளக்கு ஏற்றுவதற்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
அந்த நமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பெருமாளையும் தாயாரையும் நினைத்து விளக்கு போட வேண்டும்.
அதாவது வேண்டுதல் வைப்பவர்கள் வயதிற்கு ஏற்ப மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கொங்கண சித்தரை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் பிறந்த நட்சத்திரம், நீங்கள் பிறந்த திதி, தெரிந்தால் அந்த நாளில் இந்த விளக்கு ஏற்றுவது கூடுதல் பலன்களை தரும். அப்படி இல்லை என்றால் வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை, திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இந்த விளக்கை ஏற்றுவது சிறப்பான பலனை தரும்.
இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு திருப்பதியில் இருக்கும் கொங்கணர் சித்தர் ஜீவசமாதிக்கு சென்று அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து கொள்ளுங்கள்.
சித்தர்கள் என்றால் சமநிலை ஆனவர்கள்.அவர்கள் முன் நின்று வழிபட அவர்களின் நம் மனம் ஒரு நிலை அடையும்.
இந்த வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பியதும், வீட்டில் யாரேனும் சிறுவயதில் இருந்திருந்தாலோ, அதாவது குழந்தை பிறந்துத்தில் இருந்திருந்தாலும் சரி, அல்லது கன்னி பெண்ணாக இருந்து இறந்திருந்தாலும் சரி, சிறுவயதிலேயே யாராவது அகால மரணம் அடைந்திருந்தாலும் சரி, அவர்களை நினைத்து வீட்டில் சின்னதாக ஒரு பூஜை செய்து வழிபாடு செய்யுங்கள்.
இப்படியாக நாம் நம்பிக்கையை எதை செய்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்கும்.உங்களுக்கும் விரைவில் திருமணங்கள் கை கூடி வர பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வர விரைவில் வீட்டில் நல்ல செய்து வந்து சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |