ஆனந்தமாக வாழ திருமூலர் சொல்லும் ரகசியம்
மனிதன் என்னதான் செய்யவேண்டும்?ஏன் இந்த பிறப்பு?ஏன் இந்த உடல்?ஏன் இந்த குடும்பங்கள்?யார் இந்த உறவினர்கள்?எதற்கு இந்த ஆட்டம் எல்லாம் என்று பலருக்கும் பல கேள்விகள் வரும்.மனிதனாக வாழ்வதில் தான் எத்தனை குழப்பங்கள்.
எதை நோக்கி செல்வது எதை கைவிடுவது எதை பின்பற்றுவது என்று மனிதன் ஒரு வகையான குழப்பத்தில் இருந்து அவனுடைய பொன்னான வாழ்க்கையை வாழாமல் வீணடித்து கொண்டு இருக்கின்றான்.அப்படியாக நமக்கு திருமூலர் திருமந்திரம் வழியாக வாழ்க்கையை உணர்த்துகிறார்.அதை பற்றி பார்ப்போம்.
திருமந்திரம்:
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்!
ஈசனோடு ஆயினும்ஆசை அறுமின்கள்!
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்!
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!
பொருள்:
மனிதனின் மிக பெரிய எதிரி ஆசை.இந்த ஆசை தான் அவனை வாழ தூண்டுவதும் அவன் வாழ்க்கையை கெடுப்பதும்.ஆதலால் ஆனந்தமான வாழ்விற்கு முதலில் நமக்கு உண்டாகும் ஆசையை அடியோடு மறந்து விடவேண்டும்.
மேலும் ஞானம் பிறந்து சிவபெருமானை அடையவேண்டும் என்பதும் ஒரு வித ஆசை தான் அந்த அசையும் நமக்கு துன்பத்தை மட்டுமே கொடுக்கும்.ஆதலால் எதை பற்றியும் சிந்திக்காமல் கடமையை செய்து பற்றற்றானாக வாழ வாழ்க்கை ஆனந்தமே என்கிறார்.
ஆனால் இதை ஒப்புக்கொண்டு வாழ எந்த மனிதனும் முன் வருவதில்லை.மனிதன் சக மனிதனை இழக்க தயாராகின்றன ஆனால் அவன் சம்பாதித்த செல்வதை இழக்க அவன் ஒரு போதும் முன் வருவதில்லை.இதற்கு எல்லாம் காரணம் ஆசை அதுனாலயே அவன் துன்புறுகின்றான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |