திருநெல்வேலியை ஆளும் காந்திமதி அம்மன்

By Sakthi Raj Jun 14, 2024 06:30 AM GMT
Report

மதுரையை ஆள்வது மீனாட்சி அம்மன் என்றால் திருநெல்வேலியை ஆள்வது அம்மா காந்திமதி அம்மன்.நெல்லையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்வது நெல்லையப்பர் காந்தி அம்மன் ஆலயம்.

நெல்லையப்பர் நெல்லைக்காப்பவர் என்று சொல்லுவார்கள்.பரதக்கலையின் குருவான நடராஜர் , தனது ஆடலை இவ்வாலயத்தில் அரங்கேற்றினார் என்பது புராணம்.

திருநெல்வேலியை ஆளும் காந்திமதி அம்மன் | Thirunelveli Kanthimathi Amman Nelaiyappar Koyil

காந்தி அம்மன் மிகவும் அன்பானவள்.அம்பாளை பார்க்கும் பொழுதே நேரில் பார்த்தது போல் அத்தனை அழகான தோற்றத்துத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.

பொருள் வளம் , குடும்பத்தில் இன்பம் ஆகியவை தவிர,ஞானம் , வாழ்வின் சிக்கலிருந்தும் விடுதலை போன்றவற்றையும் தன் பக்தர்களுக்கு காந்திமதி அம்மன் அருள்புரிகிறாள்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெல்லையப்பருக்கும் . காந்திமதிக்கும் புதிய வஸ்திரங்களை வழங்கியும் , ஆலயம் வந்திருக்கும் பக்தர்களுக்கு உணவுகள் அளித்தும் , இறைவனுக்கு பூஜை செய்து நிவேதனம் அளிப்பர்.

தினம் ஒரு திருவாசகம்

தினம் ஒரு திருவாசகம்


கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் பிள்ளைகள் , காந்திமதி அம்மனைதொடர்ந்து வழிபடுதல் படிப்பில் முன்னேற்றத்தை தரும்.

மேலும் காந்திமதி அம்மனுக்கு வளையல் மஞ்சள் குங்குமம் வாங்கி கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் என அனைத்து செல்வங்களையும் அம்பாள் அருளிச்செய்கிறாள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US