திருமண தடை நீங்க ஒருமுறை திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயில் சென்று பரிகாரம் செய்தால் போதும்

By Aishwarya Jan 29, 2025 05:30 AM GMT
Report

ஆன்மீக தலங்களை அதிகம் கொண்ட மாவட்டமாக திருச்சி விளங்குகிறது. செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் மற்றும் திருமண திருமண தடை ஆகியவற்றை நீக்கும் பரிகார தலமாக இங்கு அமைந்துள்ளது.

திருமணம் ஆகாமல் தடைபட்டுக் கொண்டிருக்கும் ஆண்களோ அல்லது பெண்களோ இந்த கோவிலுக்கு வந்து, அர்ச்சனை செய்து, அங்கு இருக்கும் கல்வாழை பரிகார பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது பல ஆண்டுகாலமாக ஒரு ஐதீகமாக இருந்து வருகின்றது. அத்தகைய சிறப்பு மிக்க கோயில் குறித்து நாம் இப்போது விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

திருமண தடை நீங்க ஒருமுறை திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயில் சென்று பரிகாரம் செய்தால் போதும் | Thiruppainjeeli Siva Temple In Tamil

தல அமைவிடம்:

திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் என்னும் பரிகார திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்மன் சமேதராக ஞீலிவனேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் நிலமடத்திற்கு கீழே, ஊரின் நடுவில் அமைந்துள்ளது.

“ஞீலி” என்றால் சாமானிய மனிதர்கள் உண்ண தகுதியற்ற இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் “கல்வாழை” எனப்படும் அரிய வகை வாழை மரத்தின் பழம். இந்த கல்வாழை மரம் இந்த தலத்தின் தலவிருச்சிகமாக திகழ்கிறது. கல்வாழை நிறைந்த தோட்டம் “ஞீலிவனம்” எனவும் அழைக்கப்படுகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜ சோழன், சுந்தரபாண்டியன், மகேந்திர பல்லவ வர்மன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்திருக்கின்றனர். 

தல வரலாறு:

தோஷங்களை நீக்கும் தலமாக திகழும் இங்கு ‘சப்த கன்னியர்கள்’ பார்வதி தேவியை நோக்கி தவமியற்றிய போது, அவர்களுக்கு காட்சி தந்த பார்வதி தேவி, சப்த கன்னியர்களையும் இக்கோயிலிலேயே கல்வாழை எனப்படும் அதிசய வாழை வடிவில் இருந்து, வழிபடும் பக்தர்களின் குறைகளை தீர்க்குமாறு அருளினார்.

எனவே திருமண தடை மற்றும் கால தாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த தெய்வீக வாழைமரங்களுக்கு செய்யப்படும் பூஜை சடங்குகளால், சப்த கன்னியர்கள் ஆசீர்வாதம் கிடைக்க பெற்று திருமண தோஷம் நீங்குகிறது.  

திருமண தடை நீங்க ஒருமுறை திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயில் சென்று பரிகாரம் செய்தால் போதும் | Thiruppainjeeli Siva Temple In Tamil

திருமண தடை நீங்க வழிபாட்டு முறை:

திருமணம் தடை மற்றும் தாமதமாகும் ஆண் மற்றும் பெண் இந்த திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. விரைவாக திருமணம் நடக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயிலில் திருமண தடை பரிகார பூஜைக்கான தொகையை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்பு கோயில் நிர்வாகத்தால் இப்பரிகார பூஜைகளை நியமிக்கபட்டுள்ள அர்ச்சகர்கள், வழிகாட்டிகள் நமக்கு கூறும் முறைப்படி பரிகார பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு நமக்கு பரிகார பூஜைகளை செய்ய உதவி புரிந்த அர்ச்சகர்கள், வழிகாட்டிகளுக்கு தட்சணை அளிப்பது நல்லது.

இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விட வேண்டும். பின்பு கோயிலின் தெய்வங்களான திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர், ஸ்ரீ விஷாலக்ஷி அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டு, கோயில் பிரசாதங்களை வாங்கி கொள்ள வேண்டும்.

பின்பு அங்கிருந்து நேரடியாக வீட்டிற்கு சென்று கோயில் பிரசாதங்களை பூஜையறையில் வைத்து வழிபட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குங்குமம், திருநீறு போன்றவற்றை திருமணம் நடக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் தங்களின் நெற்றியில் இட்டு வர வேண்டும். இந்த பரிகார முறைகளை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். 

தல அமைப்பு:

ஐந்து பிரகாரங்கள், ராவணன் திருவாயில் கோபுரம், மொட்டைக் கோபுரம் ஆகியவற்றை இத்தலம் கொண்டுள்ளது. இராவணன் வந்து வழிபட்டுச் சென்றதால் இக்கோயிலின் ராஜகோபுரம் இராவணன் திருவாயில் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

கோயிலுக்குள்ளும், வெளிப்பகுதிகளிலும் சப்த தீர்த்தம், விசாலத் தீர்த்தம், எமத் தீர்த்தம், கல்யாணத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் என 7 தீர்த்தங்கள் உள்ளன. திருப்பைஞ்ஞீலி என்று மட்டுமல்லாது தென் கயிலாயம், ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம் ஆகிய பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு.

இத்திருக்கோயில் இறைவன் ஞீலிவனநாதர் என்றழைக்கப்படுகிறார். மற்ற சிவத்தலங்களில் இறைவனைத் தரிசிக்க நாம் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் சென்று வழிபடுவோம். ஆனால் இங்கு அதற்கு எதிர்மாறாக, படிக்கட்டுகளிலிருந்து கீழே இறங்கிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். கருவறை சன்னதியை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வசிஷ்ட முனிவருக்கு சிவபெருமான் நடனக் காட்சியருளிய இடம் அமைந்துள்ளது.

அதனாக் இக்கோயில் ரத்தினசபை எனப்படும் மேலைச் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது. சுயம்பு வடிவத்தில் ஞீலிவனேசுவரர் காட்சியளிக்கிறார். மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு இங்கு காணப்படுகிறது. அதாவது இக்கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன.

திருமண தடை நீங்க ஒருமுறை திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயில் சென்று பரிகாரம் செய்தால் போதும் | Thiruppainjeeli Siva Temple In Tamil

ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதில் நீள்நெடுங்கண் நாயகி சன்னதியில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தலத்தில் வாழை மரமே தல விருட்சமாக உள்ளது.

இங்குள்ள வாழை மரம் ‘ஞீலி’ என்றொரு வகையைச் சார்ந்தது. இதன் இலை, காய், கனி அனைத்தும் இத்தல ஈசனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இறைவனுக்கு இவை நிவேதனம் செய்யப்பட்ட பிறகும் கூட, பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுவதில்லை.

நைவேத்தியத்திற்கு பின்னர் அவற்றை நீரில் விட்டு விடுகின்றனர். ‘ஞீலி’ வகையைச் சேர்ந்த வாழை வேறு இடங்களில் பயிரிடப்படுவதில்லை. ஏனெனில் இந்த வகை வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை, காய், கனிகளைப் பயன்படுத்தினால் நோய் தாக்கும் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக காரணம் கூறப்படுகிறது.

தீரா நோயையும் குணப்படுத்தும் வெட்டுவானம் எல்லையம்மன்.. முழு உடல்நலம் பெற ஒருமுறை சென்று வாங்க

தீரா நோயையும் குணப்படுத்தும் வெட்டுவானம் எல்லையம்மன்.. முழு உடல்நலம் பெற ஒருமுறை சென்று வாங்க

இரண்டு அம்பாள் சன்னிதிகளுக்கான காரணம்:

இங்கு இரண்டு அம்பாள் சன்னிதிகள் உள்ளன. ஒன்று மூலவருக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கியும், மற்றொன்று தெற்கு நோக்கியும் உள்ளன. இத்தல விசாலாட்சி அம்மன் சிலையில் பின்னம் ஏற்பட்டதால், புதியதாக ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து பழைய அம்மன் சிலையை அகற்றப்பட்டது. அப்போது ஊரார் கனவில் தோன்றிய அம்மன், “உங்கள் வீட்டில் யாருக்காவது உடலில் ஊனம் ஏற்பட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவீர்களா?” என்று கேட்க, ஊர் மக்கள் மீண்டும் பழைய அம்மன் சிலையை மற்றொரு சன்னிதியில் வைத்து வழிபடத் தொடங்கினர். 

திருமண தடை நீங்க ஒருமுறை திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயில் சென்று பரிகாரம் செய்தால் போதும் | Thiruppainjeeli Siva Temple In Tamil

எமதர்மராஜனுக்கு தனி சன்னதி:

திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட எமதர்மராஜனுக்கு, இறைவன் மீண்டும் குழந்தையாய் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்ப அளித்த கோயில் இதுவாகும். எமதர்மராஜனுக்கு உயிரை எடுக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டதால், பூமியில் பிறப்பு என்பது மட்டும் இருந்து, இறப்பு என்பது இல்லாமல் போனால் பூமி தாங்காது எனக் கூறி, பூமாதேவியிடம் தேவர்கள் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, தைப்பூசத் தினத்தில் எமதர்மராஜனுக்கு சிவபெருமான் உயிரை எடுக்கும் அதிகாரத்தை வழங்கியதால், இங்குள்ள சன்னதி அதிகாரவல்லவர் சன்னதி என அழைக்கப்படுகிறது. இங்கு சோமாஸ்கந்தருடன் தாட்சாயிணி அம்பிகா சமேத மிருத்யுஞ்ஜயர் இறைவனாகக் காட்சியளிக்கிறார். இறைவன் காலின் கீழ் முயலகன் வடிவம் காணப்படுகிறது.

வேலூர் மாவட்டம் சென்றால் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய நரசிம்மர் கோயில்

வேலூர் மாவட்டம் சென்றால் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய நரசிம்மர் கோயில்

 

அதிகாரம் இழந்தவர்கள், உத்தியோகம் இல்லாமல் இருப்பவர்கள், கடன் பிரச்னையால் சிக்கித் தவிப்பவர்கள் இச்சன்னதியில் வழிபட்டால் பலன் பெறுவார்கள் மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. சனிக்கிழமைகளில் வழிபடுவது மேலும் சிறப்பாகும். இச்சன்னதியில் ஆயுள் ஹோமமும் நடத்தப்படுவது உண்டு.

தமிழகத்தில் குடைவரைக் கோயில்களைக் கொண்டவையில் இங்கு அமைந்துள்ள எமதர்மராஜ சன்னதியும் ஒன்றாகும். இந்த தலத்தில் நவக்கிரக விக்ரகங்கள் கிடையாது. மற்ற கோயில்களில் நவக்கிரகங்கள் விக்கிரகங்களாக இருக்கும்.

ஆனால் இத்திருக்கோயிலில் 9 படிகள் 9 நவக்கிரகங்களாகவும், 9 தீப வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. எமன் சனீஸ்வரனுக்கு அதிபதி என்பதால் இக்கோயிலில் நவக்கிரகங்கள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இக்கோயிலின் பிரகாரத்தில் விநாயகர், சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் பெருமாளுடன் சேர்ந்தபடி காட்சியளிப்பதும், தட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் சிறப்புக்குரியது. இவற்றைத் தவிர, இறைவன் ஞீலிவனநாதரின் சன்னதியின் பின்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பதும் சிறப்பானது.

திருமண தடை நீங்க ஒருமுறை திருப்பைஞ்சீலி ஞீலிவனநாதர் கோயில் சென்று பரிகாரம் செய்தால் போதும் | Thiruppainjeeli Siva Temple In Tamil

திருமண தடை நீங்க:

திருமண தடை மற்றும் கால தாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த தெய்வீக வாழைமரங்களுக்கு செய்யப்படும் பூஜை சடங்குகளால், சப்த கன்னியர்கள் ஆசீர்வாதம் கிடைக்க பெற்று திருமண தோஷம் நீங்குகிறது.

திருமணம் தடை மற்றும் தாமதம் ஆகும் ஆண் மற்றும் பெண் இந்த திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. சீக்கிரம் திருமணம் நடக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் திருமண தடை பரிகார பூஜைக்கான தொகையை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தோஷம் விலக வேண்டுமா?ராமர் வழிபாடு செய்த இந்த கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க

தோஷம் விலக வேண்டுமா?ராமர் வழிபாடு செய்த இந்த கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க

பின்பு கோவில் நிர்வாகத்தால் இப்பரிகார பூஜைகளை நியமிக்கபட்டுள்ள அர்ச்சகர்கள், வழிகாட்டிகள் நமக்கு கூறும் முறைப்படி பரிகார பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு நமக்கு பரிகார பூஜைகளை செய்ய உதவி புரிந்த அர்ச்சகர்கள், வழிகாட்டிகளுக்கு தட்சணை அளிப்பது நல்லது.

இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விடுவது நல்லது. பின்பு கோவிலின் தெய்வங்களான “திருப்பைஞ்சீலி நீலிவனநாதர், ஸ்ரீ விஷாலக்ஷி அம்பாளையும்” அர்ச்சனை செய்து வழிபட்டு, கோவில் பிரசாதங்களை வாங்கி கொள்ள வேண்டும்

. பின்பு நேரே நமது இல்லங்களுக்கு திரும்பி அக்கோவில் பிரசாதங்களை பூஜையறையில் வைத்து வழிபட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குங்குமம், திருநீறு போன்றவற்றை திருமணம் நடக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் தங்களின் நெற்றியில் இட்டு வர வேண்டும். இந்த பரிகார முறைகளை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.  

தல சிறப்புகள்:

திருமணத்தடை நீக்கும் பரிகாரத் தலம் பசுமையான ஞீலி என்னும் வாழை மரங்களை (கல்வாழை) தலவிருட்சமாகக் கொண்டிருப்பதால், இங்குள்ள இறைவன் ஞீலிவனநாதர் (வாழைவனநாதர்) என்றழைக்கப்படுகிறார்.

தீரா நோயையும் குணப்படுத்தும் வெட்டுவானம் எல்லையம்மன்.. முழு உடல்நலம் பெற ஒருமுறை சென்று வாங்க

தீரா நோயையும் குணப்படுத்தும் வெட்டுவானம் எல்லையம்மன்.. முழு உடல்நலம் பெற ஒருமுறை சென்று வாங்க

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர், திருவானைக்கா சம்புகேசுவரர், திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரை அப்பர் தரிசனம் செய்துவிட்டு, திருப்பைஞ்ஞீலியைக் காண வந்தபோது கடும் வெயிலாலும், அகோர பசியினாலும் நடைத் தளர்ந்து காணப்பட்டார்.

தன்னைக் காணவந்தவர் பசியால் தளர்ந்த நிலையில் இருப்பதை உணர்ந்த சிவபெருமான், கட்டுசாதத்துடன் அந்தணர் வேடம் பூண்டு திருப்பைஞ்ஞீயிலிருந்து 1 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள பகுதியில் அப்பரின் பசியைப் போக்கி, அவரைத் திருக்கோயில் வரை அழைத்துவந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

திருக்கோயில் வரை அந்தணர் வேடத்தில் வந்த சிவபெருமான், திடீரென மறைந்து பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் அப்பருக்குக் காட்சியளித்தாராம். அதன் பின்னர்தான் தனது பசியைப் போக்கி, தன்னை திருக்கோயில் வரை அழைத்து வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்து, அப்பர் மனமுருகி வழிபட்டார்.

பார்வதி தேவியுடன் ரிஷபாருட வாகனத்தில் சிவபெருமான் அப்பருக்குக் காட்சியளித்த தலமாக திருப்பைஞ்ஞீலி விளங்குகிறது. இதனால் இங்குத் தனி சன்னதியில் சோறுடைஈசுவரர் காட்சியளிக்கிறார். பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகள் இக்கோயிலில் கல்வாழைகளாக இருப்பதாக திருக்கோயில் புராணங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இத்திருக்கோயில் செவ்வாய் தோஷம், தார, புத்திர தோஷம் போன்ற பல்வேறு தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. திருமணம் ஆகாமல் தடைப்பட்டிருக்கும் ஆண் அல்லது பெண் இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்மன் சன்னதிகளில் அர்ச்சனை செய்து, கல்வாழை பரிகார பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

திருமணம் முடிவாகிய பின்னர், திருக்கோயில் நிர்வாகத்துக்கு திருமண அழைப்பிதழை அனுப்பி வைப்பதும், திருமணம் முடிந்த பின்னர் தம்பதி சகிதமாக வந்து பரிகார நிவர்த்தி பூஜை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இது இன்றும் இக்கோயிலில் காண முடியும். திருமண அழைப்பிதழை அனுப்பி வைப்பவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் குங்கும-விபூதி பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது.

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

விழாக்கள்:

இத்திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சித்ரா பௌர்ணமி தினத்தில் தேரோட்டம் நடைபெறும். இவைத் தவிர சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தன்று அப்பர் திருக்கட்டமுது பெருவிழாவும் நடத்தப்படும்.

வாரத்தில் அனைத்து நாள்களிலும் பரிகார பூஜை செய்யப்பட்டாலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவிலான கூட்டம் கூடுகிறது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, பிற மதத்தினரும் இந்த கல்வாழை பரிகாரப் பூஜையில் பங்கேற்பது தனிச்சிறப்பாகும்.

பங்குனி, புரட்டாசி மாதங்களின் 6,7,8-ஆவது நாள்களில் சூரிய பூஜை பெருவிழா நடைபெறுகிறது. கோயிலிலுள்ள சூரிய பெருமானுக்கு இந்த நாள்களில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சூரிய ஒளி இறைவன் மீது படும் வகையில் கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தைப்பூசத் தினத்தன்று கொள்ளிடக் கரையில் சுவாமி எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் மற்ற கோயில்களின் சுவாமிகளுடன் சேர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருந்த அம்மன் ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கிராமத்திலுள்ள காவல் தெய்வமான அருள்மிகு வனத்தாயி அம்மன் மாசித் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வாரம் இந்த விழா சிறப்பாகநடைபெறும்.

வழிபாட்டு நேரம்:

காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் மக்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US