சிவபெருமான் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி.. பலரையும் வியக்கவைக்கும் அதிசயம்
புதுச்சேரி ஒரு ஆன்மீக பூமியாகவே திகழ்கிறது. அரவிந்தர், ஸ்ரீமத் குரு சித்தானந்தர், வண்ணாரப் பரதேசி, சக்திவேல்பரமானந்தா, உள்ளிட்ட பல்வேறு சித்தர்களுடைய ஜீவ சமாதிகள் இங்கு இருக்கிறது. இந்த ஜீவசமாதிகளுக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இவ்வாறு நிறைய அற்புதம் நிறைந்த புதுச்சேரியில் சிவபெருமான் கைப்பட எழுதிய ஓலை சுவடி ஒன்று இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பை புதுச்சேரிக்கு கொடுக்கிறது. அதாவது, 3500 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் கூற சிவபெருமானே திருவாசகத்தை எழுதி அதன் அடியில் அவருடைய கையெழுத்திட்ட ஓலைச்சுவடி தான் புதுச்சேரியில் இருக்கிறது என்பது எல்லோரையும் வியக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.

பன்னிரு சைவ சமய திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக இருக்கிறது. திருவாசகம் படித்தால் மனம் உருகாதவர் எவரும் இல்லை என்பது போல் பக்தி சுவையும், மனதை உருக்குகின்ற தன்மையும் கொண்டது திருவாசகப் பாடல்கள். இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் கடவுள் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை.
ஆனால் கடவுளே தன்னுடைய கையெழுத்திட்ட ஓலைச்சுவடி ஒன்று இருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. புதுச்சேரியில் செட்டி தெருவில் உள்ள அம்பலதடையார் என்கின்ற மடத்தில் தான் சிவபெருமானுடைய கையெழுத்து இட்ட இந்த ஓலைச்சுவடி பல்லாயிரம் ஆண்டுகளாக மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
3500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருவாச ஓலைச்சுவடி ஒவ்வொரு ஆண்டின் பொழுதும் மகா சிவராத்திரி அன்று மட்டும் அவை இருக்கும் வெள்ளி பெட்டியில் இருந்து திறந்து பூஜை செய்யப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று இந்த ஓலைச்சுவடியை வணங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு செய்வதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு ஓலைச்சுவடியை பக்தர்கள் தொட்டு பார்க்கவோ அல்லது அதனுடைய அருகில் சென்று வழிபாடு செய்வதற்கும் அனுமதி கிடையாது. பக்தர்களின் கண்களுக்கு எட்டாத தூரத்தில் மட்டுமே ஓலைச்சுவடி வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு வைத்திருப்பது சமயங்களில் பக்தர்கள் இடையே சில சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சிவபெருமான் கையெழுத்திட்ட ஓலைச்சுவடியை நாம் பார்த்தால் சிவபெருமானையே நேரில் பார்த்தது போல் என்ற நம்பிக்கையில் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
அதோடு இங்கு வந்து தரிசனம் செய்ய வாழ்வில் நாம் எல்லா நலன்களையும் பெறலாம் என்றும் பக்தர்களுடைய நம்பிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |