தினம் ஒரு திருவாசகம்
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே
விளக்கம்
ஊமத்தம் ‘மத்தம்’ என முதற்குறையாயிற்று. இறைவனுக்கு உகந்த மலர்களுள் ஊமத்தம் ஒன்று. சிஷ்டர் என்ற வடமொழிச்சொல் சிட்டர் என வந்தது. மூடிய கைம்மேல் அரவத்தை இட்டு ஆட்டியது
திருப்புறம்பயத்தில் ஓர் அடியவள்பொருட்டு இறைவன் பாம்பாட்டியாய்ச் சென்று, பாம்பு தீண்டி மாண்ட அவள் கணவனை உயிர்ப் பித்தருளினன்.
கச்சாகவும் கங்கணமாகவும் அணிந்த ஏனையவை, தாருகாவனத்து முனிவர்கள் இறைவன் மேல் ஏவப்பட்டவையாம். இதனால், இறைவனது அணி கூறப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |