இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தான் பணத்தை ஈர்க்கும் அதிர்ஷ்ட கர்மா உண்டாம்
மனிதனுடைய முக்கியமான தேவையாக பணம் இருக்கிறது. அந்த பணத்தை எல்லாரும் எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை சேமித்து வைக்கக்கூடிய ஆற்றல் ஒருசில ராசியினருக்கு மட்டுமே இருக்கிறது. அப்படியாக ஒரு சில ராசியினருக்கு மட்டுமே பணத்தை ஈர்க்கக்கூடிய அதிர்ஷ்ட கர்மா இருக்குமாம்.
அதனால் இவர்கள் பணத்தை அவ்வளவு அழகாக கையாள்வார்களாம். அது மட்டுமில்லாமல் இவர்களிடம் பணம் எப்பொழுதும் நிலையானதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரன் தான் ஒரு மனிதனுக்கு சுகபோக வாழ்க்கையை வழங்கி மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவர். அப்படியாக ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அதிர்ஷ்டம் என்பது அவர்கள் உடன் பயணிக்க கூடிய ஒன்றாக இருக்கும்.
எந்த ஒரு நிலையிலும் இவர்கள் கீழே விழாத நிலையில் இவர்களுடைய ராசி இவர்களை பிடித்துக் கொள்ளும். இவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக எல்லா விஷயங்களும் செய்ய வேண்டும் என்று நினைப்பதால் பண சேமிப்பதிலும் இவர்கள் கவனமாக இருந்து மீண்டு விடுகிறார்கள்.
மகரம்:
சனிபகவானுடைய வீடான மகர ராசிக்கு உழைப்பு மட்டுமே பிரதானமாக இருக்கும். இவர்கள் உழைப்பால் பொருளாதாரத்திலும் சமுதாயத்தில் நற்பெயரையும் பெறக்கூடியவர். மேலும் இவர்கள் கடினமான உழைப்பை விரும்புவதை காட்டிலும் புத்திசாலியாக உழைப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
ஆதலால் இவர்களுடைய அறிவாற்றலாலால் இவர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பண விஷயங்களில் இவர்களுக்கு கேட்ட இடங்களில் உடனே உதவி கிடைக்கக்கூடிய நிலை இருக்கும்.
கன்னி:
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் நிறைய நபர்கள் இந்த கன்னி ராசியாக இருக்கக்கூடிய நபராக இருப்பார்கள். கன்னி ராசியினருக்கு எப்பொழுதுமே பணம் பற்றாக்குறையாக இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லா விஷயங்களையும் கணக்காக செயல்பட கூடியவர்கள். அதேபோல் இவர்கள் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை அவ்வளவு செய்ய மாட்டார்கள்.
கன்னி ராசியினர் எப்பொழுதும் பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும்? எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டிருப்பதால் பணம் இவர்கள் கைகளில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |