பகவத் கீதை-ஒரு மனிதனிடம் இருக்கவே கூடாத 3 குணங்கள்
கடவுள் படைப்பான இந்த உலகம்,மிகவும் அதிசயங்கள் நிறைந்தது.ஆழமாக யோசித்து பார்த்தால் மனிதனுக்கு கொடுக்க பட்ட கடமையே வாழ்தல் தான்.
அப்படியாக,அந்த இடைப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்?எவ்வாறு வாழ கூடாது?என்பதற்கு புராணங்களும் இதிகாசங்களும் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
காரணம்,மனிதர்கள் பலரும் பல்வேறு விதம்.எவரிடம் என்ன குரோதம் ஒளிந்து இருக்கும் என்று கணிக்கவே முடியாது.நாம் சாதரணமாக செய்த செயல் கூட நமக்கு எதிர்பாராத விளைவுகளை கொண்டு வந்து விடும்.
மேலும்,நம்முடைய ஒவ்வொரு அசைவுகளுக்கு எதிர் வினைகள் இருக்கிறது என்பதை நமக்கு மிக தெளிவாக உணர்த்துகிறது பகவன் கிருஷ்ணரின் பகவத் கீதை.நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் காரணம் காரியங்களை பகவத் கீதை வாசித்தல் வழியாக புரிந்து கொள்ளலாம்.
அப்படியாக,பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் மனிதன் முக்கியமான 3 காரணத்தினாலே அவன் அழிவை சந்திக்கின்றான் என்று சொல்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.
மனிதன் அவன் வாழ்வில் 3 காரணத்திற்காக மிக பெரிய துன்பத்திலும் பாவ செயலிலும் சிக்கி கொள்கின்றான்.அவை அவனை பெரும் வீழ்ச்சியை சந்திக்க வைத்துவிடுகிறது.
அது தான் கோபம்,பேராசை,காமம்.மனிதன் வாழ்க்கை பாதையை மிக பெரிய ஆபத்தில் சிக்க வைக்கும் முக்கிய காரணியாக இந்த மூன்றும் திகழ்கிறது.
கோபம்:
ஒருவனை நிம்மதி இழக்க செய்கிறது.கோபத்தினால் அவன் அன்பு,கருணை என்று அனைத்து நல்ல விஷயங்களை இழக்கின்றான்.கோபம் அதிகம் இருக்கும் மனதில் கடவுள் தங்கமாட்டார்.அவர்கள் நிதானம் இழந்து தொடர் எதிரிகளை சம்பாதிக்க நேரிடும்.
கோபம் அவனின் அழிவின் முதல் கட்டமாக இருக்கிறது. ஆக கோபத்தை பிடிங்கி எரிந்து மனதில் இறைவனை நிறுத்த மனம் மென்மை அடையும்,வாழ்க்கையும் மேன்மை அடையும்.
பேராசை:
மனிதனை புத்தி செயல் இழந்து செயல்படுத்தும் கொடூரமான குணங்களில் இந்த பேராசையும் ஒன்று.இந்த பேராசையால் யோசிக்காமல் நிறைய தவறுகள் செய்கின்றான்.வாழும் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் போகும்.
பேராசை கொண்டவர்கள் பொய் சொல்ல தயங்க மாட்டார்கள்.அதே போல் அவர்கள் சுகத்திற்காக பிறரை துன்புறுத்தவும் தயங்க மாட்டார்கள்.இந்த குணமே அவனை மீண்டு வர முடியாத பெரிய பாவ செயலில் சிக்க வைத்து விடுகிறது.
காமம்:
காமம் என்ற உணர்வை கட்டுப்பாட்டுக்குள் வைக்காதவன் மதிப்பற்றவனாக,மதி இழந்தவனாக இருக்கின்றான்.அவனின் அறிவு கண்ணை முழுமையாக மறைக்கிறது.காமம் உணர்வு அதிகம் கொண்ட மனிதன் எத்தனை நன்மைகள் செய்தாலும் அவை அவனுக்கு சென்று சேர்வதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |