இந்த 3 பொருட்கள் வீடுகளில் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்- நிதி சிக்கல் உண்டாகுமாம்

By Sakthi Raj Oct 30, 2025 04:15 AM GMT
Report

  நம்முடைய வீடு என்பதை நாம் எப்பொழுது மங்களகரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும் வாஸ்து ரீதியாக நம்முடைய வீடுகளில் வைத்திருக்கக்கூடிய பொருட்கள் மீதும் நாம் அவ்வப்போது சில கவனங்கள் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.

அதாவது நம் வீடுகளில் வைத்திருக்கக்கூடிய பொருட்கள் சில நேரங்களில் நமக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுத்து விடும். ஆதலால் அவற்றின் மீது நாம் ஒரு பார்வை எப்பொழுதும் வைத்துக்கொண்டு தேவை இல்லாததை அகற்றுவது அவசியம் என்கிறார்கள்.

அப்படியாக நம் வீடுகளில் ஒரு குறிப்பிட்ட மூன்று பொருட்களை வைத்திருக்கக் கூடாது என்றும் அவ்வாறு அவை இருக்கும் பொழுது சனிபகவானின்கோபத்திற்கு ஆளாக நேரும் என்றும் சொல்கிறார்கள். அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.

இந்த 3 பொருட்கள் வீடுகளில் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்- நிதி சிக்கல் உண்டாகுமாம் | Three Things We Shouldnt Keep At Home For Goodness

நாம் எப்பொழுதும் வீட்டில் உடைந்து போன மின்சார சாதனைப் பொருட்களை உடனே அகற்றி விடுவது நல்லது. அவை தேவை இல்லாத ஒரு இடங்களில் போட்டு வைத்திருப்பது என்பது நம்முடைய வீடுகளுக்கு சில எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் வீட்டின் மூலையில் இவ்வாறான பொருட்களை வைத்திருப்பார்கள்.

அவை அவர்களுக்கு மிகப்பெரிய நிதி சிக்கலை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள். அதேபோல் வீடுகளில் ஏதேனும் துருப்பிடித்த பொருட்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றி விடுவது நன்மை. இரும்பு என்பது சனிபகவானுக்குரிய பொருளாகும்.

ஆக இவ்வாறான இரும்பு பொருட்கள் மிகவும் துருப்பிடித்து ஓர் இடத்தில் அவை பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகி நாம் சில சிக்கல்களை சந்திக்க நேரும்.

இந்த 2 ராசிகளிடம் பழகும் பொழுது கவனம் வேண்டுமாம்? ஏன் தெரியுமா?

இந்த 2 ராசிகளிடம் பழகும் பொழுது கவனம் வேண்டுமாம்? ஏன் தெரியுமா?

அதே சமயம் உடைந்த பாத்திரங்கள் அல்லது ஓடாத கடிகாரங்கள் போன்ற சில அழகான பொருட்களாகவே இருந்தாலும் அதில் ஏதேனும் கீறல் அல்லது பாதிப்புகள் இருந்தால் உடனே அகற்றி விடுவது தான் நல்லது. சிலர் பழைய பொருட்களை கழிப்பதற்கு சில சிரமங்களை சந்திப்பார்கள்.

அதை அவர்களுக்கு அவ்வளவு எளிதாக வெளியே தூக்கி போடுவதற்கு மனம் வருவதில்லை. அவ்வாறாக பழைய கிழிந்த துணிகளாக இருக்கட்டும் பழைய பொருட்களாக இருக்கட்டும் கட்டாயம் வீடுகளில் பழைய பயன்படுத்தாத பொருட்களை நாம் உடனுக்குடன் அகற்றிவிட்டு வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது தான் நம்முடைய வீட்டிற்கு மிகச்சிறந்த நன்மையை பெற்றுக் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US