பூவாக மாறிய அஸ்தி: நடந்தது என்ன?
காசி ராமேஸ்வரம் சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அதைவிட பல மடங்கு பலன் தருகிறார் புஷ்பவனேஸ்வரர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேஸ்வரர் கோயில், இத்தலத்திற்கு வந்தால் காசி ராமேஸ்வரம் சென்று தரிசித்தால் எத்தனை கோடி புண்ணியங்கள் கிடைக்குமோ அதை விட பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
மேலும், ஐம்பூதங்கள் என்பது நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் மற்றும் நீர்.
ஒரு மனிதன் வாழ்வதற்கு இந்த ஐம்பூதங்களும் எப்படி தேவைப்படுகிறதோ அதே போல் ஒரு மனிதன் இறந்தும், இந்த ஐம்பூதங்களும் தேவைப்படுகிறது.
அதாவது ஒரு மனிதன் இறந்து அவனுடைய உடலை ஆன்மாவை எரிப்பதற்கோ இல்ல புதைப்பதற்கோ எரித்த உடலின் அஸ்தியை கரைப்பதற்கு ஐம்பூதங்களும் வேண்டும்.
அப்படி இருக்க இந்துக்களில் நாம் இறந்த ஒருவரின் அஸ்தியை கரைப்பதற்கு பல பேர் காசி ராமேஸ்வரம் செல்வதுண்டு.
ஆனால் காசி ராமேஸ்வரம் தாண்டி புண்ணியம் தருகிறார் புஷ்பவனேஸ்வரர் என்கின்றனர் பக்தர்கள்.
அதாவது ஒருமுறை தர்மயக்ஞன் எனும் அந்தணர் தன் தந்தையின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் செல்லும்போது ,செல்லும் வழியில் களைப்பாக இருக்க ஓய்வெடுப்பதற்காக இந்த புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருக்கின்றனர்.
ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும்பொழுது உடன் வந்த ஒருவர் அஸ்தி இருக்கும் கலசத்தை திறந்து பார்த்திருக்கிறார்.
அப்பொழுது அந்த கலசத்தில் அஸ்திக்கு பதிலாக பூக்கள் இருந்திருக்கின்றது. ஆனால் அதை தர்மயக்ஞனிடம் அவர் சொல்லவில்லை.
பிறகு இருவரும் ராமேஸ்வரம் வந்தடைந்தனர், அப்பொழுது அவர் ராமேஸ்வர கடலில் கலசத்தை திறந்து பார்த்திருக்கிறார் பூவுக்கு பதிலாக அஸ்தி இருந்திருக்கிறது. ஒரே ஆச்சரியம்
பிறகு இந்த ஆச்சரியமான செய்தியை தர்மயக்ஞனிடம் தெரிவிக்கவே அஸ்தியை எடுத்து கொண்டு மீண்டும் திருப்புவனம் வந்தனர், அப்பொழுது அஸ்தி பூவாக மாறி இருந்தது, அதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
ஆதலால் காசி ராமேஸ்வரம் தாண்டி 16 மடங்கு புண்ணியம் பெற்ற தலமாக இந்த தலம் விளங்குகிறது, பித்திருக்களின் பலனை இங்கு செய்தால் கூடுதல் பலன் கிடைக்கின்றது என்கின்றனர்.