தினம் ஒரு திருவாசகம்
By Sakthi Raj
நாயிற் கடையாம் நாயேனை
நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.
விளக்கம்
நெற்றிக் கண்ணையுடைய பெருமானே! நாயினும் கீழான, அடியேனை விரும்பி, நீயே அடிமை கொண்டாய். மாயா காரியமான இப்பிறப்பை உன்னிடம் ஒப்புவித்து உன் ஆணைவழி நடப்பதன்றி ஆராயும் தன்மை நானோ உடையேன்?
இவ்விடத்தில் அதிகாரம் என்னுடையதோ? இல்லை.ஆதலால் என்னை நீ இந்த உடம்பில் வைப்பினும் வைப்பாய். உன்னுடைய திருவடி நீழலில் சேர்ப்பினும் சேர்ப்பாய். அஃது உன் விருப்பம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |