நாளைய ராசி பலன் (26-01-2026)
மேஷம்:
சிலருக்கு திடீர் உடல் நிலை குறைபாடுகள் வரலாம். பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதையும் தீர ஆலோசனை செய்து முடிவு எடுங்கள்.
ரிஷபம்:
சொந்தங்கள் மத்தியில் நீங்கள் இன்று நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.
மிதுனம்:
பழைய நண்பர்ளை சந்தித்து மன மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் காலம் ஆகும். குடும்பத்தில் தாய் மாமன் உடல் நிலையில் மிகுந்த கவனம் வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் சண்டை வரலாம்.
கடகம்:
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். துணிச்சலாக முடிவு எடுக்கும் நாள். வாழ்க்கை துணையின் ஆறுதல் பெறுவீர்கள்.
சிம்மம்:
எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வங்கி அதிகாரிகள் சற்று கவனமாக செயல் பட வேண்டும்.
கன்னி:
குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் விலகும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்:
குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். அரசியல் அரசாங்க தொடர்பான விஷயங்களில் இருந்த மோதல் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
தந்தை வழி சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். திருமணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். திடீர் மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள்.
தனுசு:
குடும்பத்தில் சந்தித்து வந்த குழப்பங்கள் விலகும். வருமான தடை விலகும். வெளியூர் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சில தடைகள் வரலாம். முன்னோர்கள் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
மகரம்:
சிலருக்கு கண் வலி வரலாம். நண்பர்கள் வட்டம் விரிவடையும். உங்களுக்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு விஷயம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம்:
எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை மற்றும் பயம் வரும். வீடுகளில் செல்ல பிராணிகளிடம் கவனமாக இருங்கள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட மோதல் விலகும். மதியம் மேல் அமைதியான நிலை உருவாகும்.
மீனம்:
வருமானத்தை உயர்த்துவதை பற்றி சிந்திப்பீர்கள். சிலருக்கு பிள்ளைகள் உடல் நிலையில் சில பிரச்சனை வரலாம். ஆலய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நன்மையான நாள்.