இன்றைய ராசிபலன் (27.06.2024)
மேஷம்
விருப்பு வெறுப்புகள் தீர்ந்து மனதில் சந்தோசம் நிலவும்.கணவன் மனைவி இடையே சண்டை விலகும்.அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம்.
ரிஷபம்
கஷ்ட காலங்கள் படி படியாக குறையும் நாள்.குடும்பத்தில் விசேஷங்கள் நடைபெறும்.தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.புதிய நண்பர்கள் அறிமுகம் அனுகூலத்தை தரும்.
மிதுனம்
மனதில் தேவை இல்லாத பதட்டம் ஏற்படும்.எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கையை சற்று குறைத்து கொள்வது அவசியம்.வேளையில் சிறு சிறு தொந்தரவுகள் வரலாம்.
கடகம்
இன்று உங்களுக்கு சிறந்த நாள்.செய்யும் காரியத்தில் அனைத்திலும் வெற்றியே.வெளிநாட்டில் இருந்து நற்செய்தி வரலாம்.குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம்
தாயார் உடல் நிலையில் அக்கறை செலுத்துவீர்கள்.வியாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.வரவுக்கு ஏற்ற செலவு வரும்.நீண்ட நில பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.
கன்னி
நாளை என்ன நடக்கும் என்ற ஆவல் அதிகம் இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி இன்மை காணலாம்.செய்த தவறை எண்ணி பார்க்கும் நாள்.
துலாம்
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உருவாகும்.வேலை செய்யும் இடத்தில பாராட்டுகள் பெறுவீர்கள்.நண்பர்களிடம் பழகும் பொழுது சற்று கவனம் அவசியம்.
விருச்சிகம்
செய்யும் வேலையில் வேண்டாத எரிச்சல் ஏற்படலாம்.சகோதிரி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.கணவன் மனைவி நல்ல ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். எல்லா செயல்களையும் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் ஆற்றலை உணர்ந்து கொள்வீர்கள்.பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
மகரம்
வரன் தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள்.உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
கும்பம்
முடிவு எடுத்த விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்வீர்கள்.பணி இடத்தில நற்பெயர் உருவாகும்.வீட்டில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளதால் கவனம் அவசியம்.
மீனம்
இன்று கொஞ்சம் சவாலான நாள் தான்.இருந்தாலும் சாதுரியமாக சமாளிப்பீர்கள்.பணிசெய்யும் இடத்துல கூடுதல் வேலை பளு வரலாம் ஆதலால் மனம் சற்று கவலை அடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |