(07.04.2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

By Fathima Apr 07, 2024 03:12 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள், அநாவசிய செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது, குடும்பத்தில் சின்ன சச்சரவுகள் வரலாம், உடன்பிறந்தவர்களால் பகை வரக்கூடும். 

ரிஷபம்

குடும்பத்தினரின் ஆதரவுடன் சொத்துக்களை வாங்குவது குறித்து யோசிப்பீர்கள், நீங்கள் எதிர்பார்த்த வேலை அமையக்கூடும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், சிறப்பான நாளாக இருக்கும்.

மிதுனம்

உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு, விலகிச்சென்றவர்கள் தேடி வரலாம், பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் கிடைக்கப்பெறும், சிந்தனை பெருகும் நாள் இதுவாகும். 

(06/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

(06/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?


கடகம் 

குடும்பத்தில் பிள்ளைகளின் பொறுப்பு அதிகரிக்கும், நீங்கள் பிறருக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்கிவிடுவீர்கள், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச்சுமை இருந்து கொண்டேஇருக்கும், ஆனாலும் அலட்சியம் வேண்டாம், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப்பெறாது, உங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள்.  

கன்னி

நன்மை கிட்டும் நாள் இன்று, பயணங்கள் சிறப்பாக அமையும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். 

(05/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

(05/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?


துலாம்

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்துவந்த வேலை முற்றுப்பெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், விருந்தினர்கள் வருகை தருவார்கள், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. 

விருச்சிகம்

அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, அண்டை வீட்டாரின் ஆதரவு கிடைக்கப்பெறும், உறவினர்களின் உண்மையான முகத்தை கண்டறிவீர்கள். 

தனுசு

பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. 

மகரம்

வெளியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், உடன்பிறந்தவர்களின் உதவியுடன் வேலையை செய்து முடிப்பீர்கள், பணியிடத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

(04-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

(04-04-2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?


கும்பம்

பணம் தொடர்பான பிரச்சனையில் மாற்றுத்தீர்வை கண்டறிவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், விரும்பிய பொருள் கைக்கு வந்து சேரும்.

மீனம்

கவலைகள் மனதில் குடிக்கொள்ளும், பிறருக்கு நல்லது என நினைத்து செய்யப்படும் செயல்களால் கெட்டப்பெயர் வந்து சேரும், கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்றாகும்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US