நாளைய ராசி பலன்(20-11-2025)

Report

மேஷம்:

இன்று நினைத்த வேலை முடியாமல் நிறைய அலைச்சலை சந்திக்கலாம். உங்கள் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். பொறுமையுடன் செயல்பட்டால் அமைதி உண்டாகும்.

ரிஷபம்:

இன்று உங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வேலையில் உங்களுக்கு முன்னேற்றமும் பாராட்டுகளும் கிடைக்கும். மதியம் மேல் எதிர்பாராத செலவுகள் வரலாம்.

மிதுனம்:

அரசு வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நாள். பழைய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசும் வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல்களை விலகி மகிழ்ச்சி உண்டாகும் நாள்.

கடகம்:

இன்று உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள். உங்கள் கனவுகள் நினைவாகும். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள்.

சிம்மம்:

உறவினர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும். மதியம் மேல் குடும்பத்துடன் பொழுதுபோக்கு நேரம் செலவு செய்வீர்கள்.

கார்த்திகை அமாவாசையில் பாவங்கள் விலக 12 ராசிகளும் செய்ய வேண்டிய தானங்கள்

கார்த்திகை அமாவாசையில் பாவங்கள் விலக 12 ராசிகளும் செய்ய வேண்டிய தானங்கள்

கன்னி:

நீண்ட நாட்களாக முடிவிற்கு வராத வேலை நல்ல முடிவை பெரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதல்கள் விலகும். உங்களை ஆலோசனையை பிறர் கேட்டு நடப்பார்கள்.

துலாம்:

இன்று உங்கள் வரவிற்கு ஏற்ற செலவுகளை சந்திப்பீர்கள். எதிர்காலம் சேமிப்பு தொடர்பான விஷயங்களை செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.

விருச்சிகம்:

புதிய முயற்ச்சிகள் இன்று வெற்றி பெரும். நண்பர்கள் வழியே சந்தித்த கஷ்டங்கள் விலகும் நாள். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.

தனுசு:

வியாபாரத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும். உங்கள் பேச்சுக்களில் இன்று கவனம் தேவை. புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை அடையும் நாள். கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

அமாவாசை அன்று இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

அமாவாசை அன்று இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

மகரம்:

வரவுகளுக்கு ஏற்ற செலவும் உண்டாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்களின் மதிப்பு உயரும் நாள். வெற்றிகள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

இன்று பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் பெறுவீர்கள். நீங்கள் சந்தித்த எதிர்ப்புகள் மறையும் நாள்.

மீனம்:

இன்று உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும். நட்புகள் வட்டாரம் விரிவடைந்து நன்மை பெறுவீர்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US