இன்றைய ராசி பலன்(29.09.2024)
மேஷம்
பல நாள் முடியாத வேலை ஒன்று இன்று நிறைவேறும்.தொழில் ரீதியான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.உங்கள் செயல்களால் லாபம் உண்டாகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
ரிஷபம்
மறைமுகமாக தொல்லை அளித்தவர்கள் விலகுவர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வருமானத்தில் தோன்றிய தடைகள் விலகும்.
மிதுனம்
இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உங்கள் திறமை வெளிப்படும்.நண்பர்கள் உதவியுடன் நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும்.
கடகம்
உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் அதிகரிக்கும்.
சிம்மம்
மனம் குழப்பத்திற்கு ஆளாகும் என்றாலும் நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.குடும்பத்தினர் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகள் வேண்டாம்.
கன்னி
திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.
துலாம்
எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.உங்களின் தனித்திறன் வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் உங்களை பார்த்து ஆச்சர்யப்படுவர்.
தனுசு
பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சி அடையும்.எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர்.
மகரம்
வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். வீண் பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நட்பால் சில பிரச்னை உண்டாகும்.
கும்பம்
ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.பணியிடத்தில் உண்டான பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும்.
மீனம்
மனம் தெளிவடையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர்.குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |