இன்றைய ராசி பலன்(11.10.2024)
மேஷம்
குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.எதிர்பார்த்த பணம் வரும். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரும்.
ரிஷபம்
பெரிய மனிதர்கள் ஆதரவால் உங்கள் வேலை வெற்றியாகும்.நேற்று இருந்த குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும்.வருமானம் உயரும்.
மிதுனம்
தேவையற்ற பிரச்னை தேடி வரும்.திரும்பிய பக்கமெல்லாம் நெருக்கடிக்கு உருவாகும்.வரவிற்காக நீங்கள் மேற்கொண்ட வேலை நடக்காமல் போகலாம்.அமைதி காப்பது நல்லது.
கடகம்
இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.தம்பதிகளுக்குள் இருந்த மனக்கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
சிம்மம்
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும்.குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
கன்னி
மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும்.உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் சிறு பிரச்னை உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.
துலாம்
திட்டமிட்ட வேலையை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்.யாரையும் நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். பணியில் கூடுதல் கவனம் தேவை.
விருச்சிகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.
தனுசு
இன்று மனம் தெளிவு அடையும்.வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.உங்கள் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்
வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.வரவு செலவில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள் நன்மை உண்டாகும்.
கும்பம்
நீண்ட நாள் ஆசை விருப்பம் நிறைவேறும். நேற்றைய கனவு பூர்த்தியாகும்.பொருளாதார நிலை உயரும். நண்பர்களால் உங்கள் வேலை நடக்கும்.வங்கி சேமிப்பில் கவனம் தேவை.
மீனம்
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும்.குடும்பத்தில் சுமூகமான சூழல் உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்.வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |