இன்றைய ராசி பலன்(14.10.2024)
மேஷம்
வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.உங்கள் செல்வாக்கு உயரும். சிறு வியாபாரிகள் நிலை உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
ரிஷபம்
வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும்.தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினருக்கு உங்களது ஆலோசனை பயனளிக்கும்.
மிதுனம்
எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
கடகம்
பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும்.சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.
சிம்மம்
நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.வாழ்க்கைத் துணை உதவியோடு பல வேலை நிறைவேறும். பிறரை அனுசரித்துச் சென்று உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.
கன்னி
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும்.இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
துலாம்
நினைத்ததை சாதிப்பீர்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும். தினப் பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
விருச்சிகம்
தாய்வழி உறவினருடன் சிறு சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் சங்கடம் தோன்றும். நிதானம் காப்பது நல்லது. எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
தனுசு
சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். நிதிநிலை உயரும்.நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை இன்று முடியும்.சகோதரர்களுக்கு உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
மகரம்
உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். புதிய பொருள் சேரும்.
கும்பம்
உங்கள் செயல் லாபமாகும்.அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விழிப்புடன் செயல்படுவீர். எதிர்பார்த்ததை அடைவீர். வரவு அதிகரிக்கும்.
மீனம்
உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதால் நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |