இன்றைய ராசி பலன்(25-09-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு தேவை இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தும் நிலை உருவாகும். குலதெய்வங்கள் அருளால் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்:

உங்களுக்கு வாழ்க்கை துணையால் சில சங்கடங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக சிலருக்கு நஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்கள் வேலையில் முழு ஈடுபாட்டை செலுத்த வேண்டும்.

மிதுனம்:

சிலருக்கு வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருளாதார ரீதியாக இன்று நீங்கள் சில சரிவை சந்திக்கலாம். சொந்த வாழ்க்கையில் ஒரு சில குழப்பங்கள் உண்டாகும்.

கடகம்:

இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலை உண்டாகும். எதிரிகளால் ஒரு சில மறைவு முக தொல்லைகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

சிம்மம்:

இன்று உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியாக பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள்.

கன்னி:

இன்று நீங்கள் உங்கள் உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மதியம் மேல் தேவையற்ற குழப்பங்கள் மனதில் தோன்றி மறையும்.

துலாம்:

காலை முதல் மனம் சற்று பதட்டமாக காணப்படும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு கோயில் வழிபாடுகளில் மனம் அதிகம் ஆர்வம் செலுத்தும்.

பில்லி சூனியம் சூழ்ந்துள்ளதாக நினைத்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள்

பில்லி சூனியம் சூழ்ந்துள்ளதாக நினைத்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள்

விருச்சிகம்:

தாய்வழி உறவுகளால் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத சுப நிகழ்ச்சிக்காண பேச்சுகள் நடக்கலாம். கணவன் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

தனுசு:

இன்று ஒரு சிலருக்கு வீடுகளில் சில முக்கியமான பணிகள் செய்வதில் தாமதம் உண்டாகலாம். சிலருக்கு தொலைதூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மகரம்:

உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்:

பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.மனதில் நிம்மதி ஏற்படும். பிறரால் முடியாத ஒரு வேலையை முடித்துக்காட்டுவீர். 

மீனம்:

ஒரு சிலருக்கு இன்று ஆடம்பர பொருட்கள் வாங்கும் நிலை உருவாகும். சிலருக்கு தேவை இல்லாத பிரச்சனைகள் வரலாம். பெருமாளை சரண் அடைவதால் சில பாதிப்புகள் குறையலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US