காக்கும் கவசமாக வெளியில் செல்லும்பொழுது நம் பைகளில் எதை வைத்து இருக்க வேண்டும்
நாம் வெளியில் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் ஒரு கைப்பை எடுத்துச் செல்வது வழக்கம்.
அப்படியாக சிலர் அந்தப் பைகள் எப்பொழுதும் வழக்கமாக நம்மை பாதுகாக்கும் பொருட்களாக கடவுளின் சிறிய புகைபடம் திருநீறு குங்குமம் வைத்து செல்வது உண்டு.
அப்படி இருக்க அது எதேர்ச்சியாக அவர்களை காக்கும் பொருளாக அவர்கள் ஆன்மீகத்தின் மீது பற்றுதல் கொண்டும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டும் எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது.
ஆனால் உண்மையில் நாம் பையில் மஞ்சள் குங்குமம் திருநீறு வைத்திருக்க வேண்டும். இந்த புனித பொருட்கள் நம்மை பாதுகாக்கும் கவசமாக அமைகிறது.
இதனால் என்ன பயன் என்று நினைத்தால் நம்ம சந்திக்கும் சிறியவர்களுக்கும் கடவுள் நாமத்தை சொல்லி திருநீறு குங்குமம் வைத்து வாழ்த்தலாம்.
அதேபோல் பெரியவர்களை சந்திக்கும் பொழுது சாஷ்டாங்கமாக வணங்கி அவர்களை இடமிருந்து திருநீறு பெற்று ஆசீர்வாதம் வாங்கலாம்.
மேலும் இப்பொருட்கள் எல்லாம் நம்மை ஆபத்திலிருந்து காட்டக்கூடிய பொருட்கள் ஆகையால் நாம் செல்லும் பயணங்களில் இல்லை நம் செல்லும் வழியில் ஏதேனும் துன்பங்கள் நேரும் என்றால் அதிலிருந்து பாதிப்பை குறைத்து நம்மை பாதுகாக்கும் கவசமாக இது அனைத்தும் அமையும் என்பதை உணர்ந்து வெளியில் செல்லும்போது கட்டாயமாக பையில் திருநீறு மஞ்சள் குங்குமம் வைத்து நம்மை பாதுகாக்கும் கடவுளை வணங்கி செல்வது நன்மையை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |