மறந்தும் வீட்டில் இந்த திசையில் துளசி செடியை வைக்க கூடாது
துளசி செடியானது ஆன்மீகம் மற்றும் மருத்துவத்தில் மிகவும் சிறப்பு பெற்றவை.இந்துக்கள் அல்லாது வீட்டிலும் இந்த துளசி செடியை நாம் பார்க்க முடியும்.அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது இந்த செடி.அப்படியாக பலரும் இந்த துளசி செடியை வீட்டில் தங்களுக்கு பிடித்த திசையில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.
ஆனால் துளசி செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் வைக்கக்கூடாது என்று சில வரைமுறைகள் உள்ளது.அதை பற்றி பார்ப்போம். துளசி செடி வீட்டில் இருப்பதால் நமக்கு ஒரு நேர்மறை எண்ணம் உருவாகிறது.
மேலும் யாருடைய வீட்டில் துளசிசெடிகள் அதிகம் காணப்படுகிறதோ, அந்த இடம் புண்ணியமான திருத்தலமாக கருதப்படுகிறது.எவர் ஒருவர் வீட்டில் துளசி செடி நல்ல முறையில் வளர்க்க படுகிறதோ அந்த வீட்டுல் அகால மரணம், வியாதி போன்ற விஷயங்கள் நெருங்குவதில்லை.
சிலர் வீடுகளில் துளசிக்கு என்று தனி மாடம் அமைத்து,துளசியை அம்மனாக கருதி வழிபடுபவர்களும் உண்டு.குறிப்பாக, வரலட்சுமி விரதத்தில் அம்மன் முகம் வைத்து வழிபடுவதுபோல், துளசி மாடத்திலும் அம்மன் முகத்தை பதிய வைத்து வழிபடுவார்கள்.
மேலும் துளசி மாடம் வைத்திருப்பவர்கள் தவறாமல் விளக்கேற்றி, காலை மாலை துளசி பூஜை செய்து, துளசி மாடத்தை வலம் வந்தால் அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி விடுகின்றன. வீட்டில் துளசியை வளர்க்கும் பொழுது எக்காரணம் கொண்டும் இரவில் துளசியை பறிக்க கூடாது.
முக்கியமாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மற்றும் பிற முக்கிய நாட்களில் துளசி செடி பறிப்பதை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக துளசியை வீட்டில் வளர்க்கும் பொழுது கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும்.இந்த திசையில் வளர்க்கும் பொழுது வீட்டிற்கு தேவையான நல்ல சக்திகள் கிடைக்கிறது.
ஒருவேளை, கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்க முடியாவிட்டால் வடகிழக்கு திசையில் வைக்கலாம். வடகிழக்கிலும் வளர்க்க முடியாவிட்டால் வடதிசையில் துளசிச்செடியை வளர்க்கலாம்.எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் வளர்க்கக்கூடாது.
மேலும் நம்முடைய வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட துளசி செடியை கட்டாயம் வளர்க்கலாம்.அப்படி வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை நட வேண்டும் என்றால் 3, 5, 7 என்ற ஒற்றைப்படை எண்களில்தான் நட வேண்டுமாம். அப்படி வைத்தால், எந்த காரியம் செய்தாலும் அது சுபமாக முடியும் என்பது நம்பிக்கையாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |