உங்கள் வீட்டில் எந்த பிள்ளையார் வைத்து வழிபட போகிறீர்கள்?
வருகின்ற(07.09.2024)அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது,அன்றைய தினத்தில் வீட்டில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து நெய்வேத்தியம் எல்லாம் படைத்தது வழிபாடு செய்வார்கள்.அப்படியா நாம் பொதுவாக சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பதுண்டு.
ஆனால் குங்குமம் மண் போன்றவற்றில் பிள்ளையார் பிடித்து வைக்க அதற்கான சிறப்பான பலன்கள் கிடைக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வியாபாரத்தைப் பெருக வைப்பார்
4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்
7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
13: பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
14 :கல் விநாயகர்- வெற்றி தருவார்
15: மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.
எப்படி சொல்லப்பட்டிருந்தாலும், விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரைத்தான் பூஜையில் வைத்து வழிபடுகிறோம்.
எதனால் தெரியுமா? மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே ஒரு நாள் மண்ணிற்குள்தான் அடங்குவோம் என்னும் மிகப் பெரிய தத்துவத்தை நாம் எல்லோரும் உணர்ந்து வகையில் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்கி வந்து, பூஜித்துவிட்டு, கடலிலோ, குளத்திலோ மண்ணோடு மண்ணாகக் கரைத்து விடுகிறோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |