மழைக்காலத்தில் மறைந்து கோடையில் காட்சியளிக்கும் ஆஞ்சிநேயர் கோவில்
நாமக்கல் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து சுமார் 2km தொலைவில் உள்ளது இந்த பாதாள ஆஞ்சநேயர் கோவில்.
இக்கோவில் அமைந்திருக்கும் இடம் சுற்றிலும் வயல் நிறைந்த இடமாகவும் ஒருபுறம் ஏரியாகவும் அமைந்துள்ளது.
இக்கோவிலின் சிறப்பு மழைக்காலங்களில் இக்கோவில் நீருக்கடியில் சென்றுவிடும் வெயில் காலங்களில் மட்டும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெறும்.
அம்மாவாசை பௌர்ணமி மற்றும் ஆஞ்சநேயருக்கு உகந்த தினங்கள் மட்டுமே இக்கோவிலில் பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.
ஆஞ்சநேயருக்கு பிடித்தமான வடமலை சாத்தப்பட்டு பின்பு பூஜைகள் நடைபெறும்.
அதன் பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசிகளால் ஆன மாலைகள் அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்பு பிரசாதங்கள் வழங்கப்படும்.
இக்கோவிலில் இன்றளவிலும் அம்மாவாசை பௌர்ணமி நாளன்று அப்பகுதி மக்கள் ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கின்றனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் இக்கோவில் பூமிக்கு அடியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |