வைகாசி விசாகம்: இந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

By Sakthi Raj May 21, 2026 10:44 AM GMT
Report

முருகப்பெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக வைகாசி விசாகத் திருநாள் இருக்கிறது. முருகப்பெருமான் அவதரித்த தினத்தில் பிறந்தவர்களுக்கு புத்தி கூர்மையும், பல புகழை பெறக்கூடிய யோகம் கிடைக்கும்.

அப்படியாக, விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகி வெற்றிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், வைகாசி விசாக தினத்தன்று நாம் முருகப்பெருமானை நினைத்து மனதில் என்ன வேண்டுதல் வைக்கின்றோமோ அவை உடனடியாக நிறைவேறும்.

அப்படியாக, வைகாசி விசாகத் திருநாள் அன்று நாம் முருகப்பெருமானுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வைகாசி விசாகம்: இந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம் | Vaikasi Visagam God Murugan Abishegam Palangal

முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் கைக்கூடி வரும். அதேபோல் பாலபிஷேகம் செய்தால் நம்முடைய பாவங்கள் யாவும் உடனடியாக தீரும். சர்க்கரை அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை வந்து சேரும்.

காவல் தெய்வம் கருப்பசாமியின் சக்திவாய்ந்த 18 வடிவங்கள் என்ன தெரியுமா?

காவல் தெய்வம் கருப்பசாமியின் சக்திவாய்ந்த 18 வடிவங்கள் என்ன தெரியுமா?

சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் சிந்தனையில் வெற்றிகள் கிடைக்கும். இளநீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு சந்ததிகள் வளமாகும். நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

வைகாசி விசாகம்: இந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம் | Vaikasi Visagam God Murugan Abishegam Palangal

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் தீராத கடன் தொல்லை விலகும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். திருநீறால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு பெயரும் புகழும் கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு அரசு வழியே நல்ல உதவியும் ஆதரவும் கிடைக்கும். பன்னிரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு உயர்ந்த செல்வாக்கு கிடைக்கும். தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு சங்கீத ஞானம் கிடைக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US