குடும்ப சங்கடங்களை தீர்க்கும் செவ்வாய் கிழமை வாராஹி அம்மன் வழிபாடு
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் மிகவும் விசேஷமாக இருக்கும். அதிலும் வாராஹி அம்மன் இருக்கக்கூடிய கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
வாராஹி பக்தர்கள் ஆடி செவ்வாய்கிழமை அன்று வாராஹி அம்மனுக்கு மஞ்சள் பொடி வாங்கி அபிஷேகம் செய்ய கொடுப்பது மிகுந்த நற்பலன்களை தரும்.
நாம் வாங்கி கொடுத்த மஞ்சளில் நடக்கும் அபிஷேகத்தை கண்குளிர பார்த்தால் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும்.
மனிதன் எப்பொழுதும் தனி மனிதன் அல்ல. அவனை சுற்றி குடும்பம் என்று இருக்கும்.
மனிதனின் பாதி மகிழ்ச்சி குடும்பத்தில் இருந்து தான் வருகிறது. அப்படியாக குடும்பத்தில் பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த மஞ்சள் அபிஷேகம் பார்க்க வீட்டில் உள்ள கவலைகள் குறையும்.
அடுத்தபடியாக செவ்வாய் கிழமை அன்று கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட வடையை வாராஹி அம்மனுக்கு நெய்வைத்தியமாக வைத்து வழிபாடு செய்து 9 அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாட நவகிரகங்களின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்.
மேலும் அம்மனுக்கு வைத்த நெய்வைத்தியதை இரண்டு நபர்களுக்கு ஆவது தானம் கொடுப்பதால் தான் அந்த பிராத்தனை நிறைவேறும் அதற்கான பலனும் கிடைக்கும்.
ஒருவேளை ஆடிச் செவ்வாய் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் வாராகிக்குரிய பஞ்சமி திதியில் இந்த வழிபாட்டை செய்வதும் குடும்ப கஷ்டத்தை தீர்க்கும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |