பன்றியால் எழுந்த தஞ்சை பெரிய கோயில்- வரலாற்றில் நடந்த அதிசயம் தெரியுமா?

By Sakthi Raj Apr 29, 2024 09:20 AM GMT
Report

நம் பாரதத்துக்கே பெருமை சேர்க்கும் கோவில் என்றால் அது தஞ்சாவூர் பெரிய கோவில்தான் அந்த கோவில் எழ ஒரு பன்றி காரணமாக இருந்திருக்கிறது என்று விசேஷ தகவல் தெரியுமா? அதை பற்றி பார்ப்போம்.

பெண் தெய்வங்களில் நம்மை கவர்பவள் வாராகி.வராகம் என்றால் பன்றி. தசாவதாரங்களில் ஒன்று வராகும். பூமித்தாயை இரண்யாட்சன் என்ற அரசன் கடத்தி சென்று பாதாளத்தில் வைத்த போது திருமால் வராக அவதாரம் எடுத்து அவளை மீட்டார்.அவரது பெண் சக்தியே வாராகி என்பர்.

பன்றியால் எழுந்த தஞ்சை பெரிய கோயில்- வரலாற்றில் நடந்த அதிசயம் தெரியுமா? | Varahiamman Tanjaikoyil Rajarajacholan Vazhipadu

மற்றொரு வரலாற்றின் படி ,ரத்த பீஜன் என்று அசுரனை கொல்ல பார்வதி தேவி துர்கையாக மாறி தன் சக்திகளை ஏழாக பிரித்தாள்.அவர்கள் சப்த கன்னிகள் எனப்பட்டனர்.

சப்தம் என்றால் ஏழு .இவர்களில் ஒருத்தி வராகி. ஒருவேளை ரத்த பீஜன் பூமிக்கு அடியில் சென்று மறைவான் என்றால் அவனை அங்கு சென்று கண்டுபிடிக்க ஒருத்தி வேண்டும்.அதனால் தான் வாராகியை உருவாக்கினால் அம்பாள்.வராகம் பூமியை குடையும் ஆற்றல் உடையது.

சனீஸ்வரரால் இனி பயம் இல்லை

சனீஸ்வரரால் இனி பயம் இல்லை


இந்த சக்தியை தங்கள் குலதெய்வமாகவே கருதினர் சோழ மன்னர்கள்.போர்களுக்கு செல்லும்போது வெற்றி வேண்டி வாராகியை வணங்கி சென்றனர்.அதிலும் தஞ்சாவூர் பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜ சோழன் வாராகியின் தீவிர பக்தனாக இருக்கின்றார்.

பன்றியால் எழுந்த தஞ்சை பெரிய கோயில்- வரலாற்றில் நடந்த அதிசயம் தெரியுமா? | Varahiamman Tanjaikoyil Rajarajacholan Vazhipadu

பொதுவாக சிவாலயங்ககுள் நுழைந்தால் விநாயகர் வணக்கமே முதன்மையானதாக இருக்கும். தஞ்சை கோவிலிலோ நம் கண்ணில் முதலில் படுவது வாராகி சன்னதி தான்.

அந்த அளவுக்கு ராஜராஜ சோழன் வாராகி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார். வாராகிய வணங்கியதால் தான் இப்படி ஒரு அரிய கலை பொக்கிஷத்தை ராஜராஜனால் பாரத மண்ணுக்கு தர முடிந்தது போல்.

அது மட்டுமல்ல ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை செவி வழி செய்தி தருகிறது. பெரிய கோவிலை கட்ட திட்டம் தீட்டி விட்டான் ராஜராஜ சோழன்.ஆனால் எந்த இடத்தில் கட்டுவது என அவனுக்கு ஏக குழப்பம்.

பன்றியால் எழுந்த தஞ்சை பெரிய கோயில்- வரலாற்றில் நடந்த அதிசயம் தெரியுமா? | Varahiamman Tanjaikoyil Rajarajacholan Vazhipadu

அப்போது பன்றி ஒன்று அவன் முகம் வந்து ஓட ஆரம்பித்தது. வாராகி பக்தரான மன்னன் அதை அம்பிகையாகவே கருதி பின் தொடர்ந்தான். அந்த பன்றி ஒரு இடத்தில் வந்து நின்று மறைந்து விட்டது. வாராகியே தனக்கு இடம் காட்டிக் கொடுத்ததாக கருதிய மன்னன்.

அங்கேயே கோவில் கட்ட துவங்கினார். பன்றி நின்ற இடத்தில் வாராகிக்கு பிரம்மாண்ட சிலை எழுப்பி ,சன்னதியும் அமைத்தான். தஞ்சாவூர் பெரிய கோவிலை ஒரு அதிசயம் தான். அதிசயத்திற்குள் இப்படி ஒரு விசேஷம் புதைந்து கிடப்பது ஆச்சிரியம் தானே.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US