வாஸ்து: வீடுகளில் மணி பிளான்ட் வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்து விடாதீர்கள்
ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிகவும் முக்கியத்துவமாக நாம் கடைபிடிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. ஜாதகத்தில் எப்படி கிரகங்கள் நன்மை தீமை போன்ற தாக்குதல்களை உண்டு செய்கிறதோ, அதேபோல் வாஸ்துவும் நம்முடைய இருப்பிடங்களின் சில முக்கிய தாக்குதல்களை கொடுக்கிறது.
அப்படியாக, நம் வீடுகளில் வாஸ்து ரீதியாக என்னென்ன விஷயங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
வீடுகளில் பிரம்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மையப்பகுதி மிகவும் முக்கியமாக இருக்கிறது. இங்கு தான் ஆகாய சக்தி உள்ளடக்கியதாக சொல்லப்படுகிறது. ஆதலால் இங்கு தூண்களோ, கழிப்பறைகளோ அல்லது அடைக்கப்பட்ட அறைகளும் இருக்கக் கூடாது.
பிரம்ம ஸ்தானத்தில் ஒரு சிறிய மேசை போட்டு அதில் நடராஜர் சிலையை வைக்கின்ற பொழுது எதிர்மறை அதிர்வுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நடராஜர் சிலையை வைத்து பஞ்சு பூத தத்துவத்தின் அடிப்படையில் நிலம் , நீர் ,காற்று, நெருப்பு, ஆகாயம் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் நஷ்டம் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
அதுபோல் துப்புரவு பணியாளர்களுக்கு நல்ல மரியாதை செலுத்தி உதவிகள் செய்தாலும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வீடுகளில் மகாலட்சுமி நிலைத்து நிற்க வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
மேலும், மணி பிளான்ட் அல்லது பிற செடிகளை வீட்டின் மேல் படர விடுவதோ அல்லது பந்தல் போல் அமைத்து வளர்ப்பதும் சிறந்த பலன்களை கொடுக்கும், அப்படியாக, வாஸ்து ரீதியாக மேலும் என்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |