வீட்டில் தங்கம், வைரம், சொத்து பத்திரங்கள் இருக்கா? பணமழை கொட்ட இந்த திசையில் வைத்திடுங்க
வாஸ்து சாஸ்திரத்தின்படி, விலையுயர்ந்த நகைகள் மற்றும் சொத்து பத்திரங்களை எல்லா இடங்களிலும், திசைகளிலும் வைக்கக் கூடாது.
இவற்றை நாம் மீறி வைக்கும் போது அந்த சொத்து நம் கையை விட்டு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
நீண்ட நாட்கள் வீட்டிலுள்ள சொத்துக்கள் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் விலையுயர்ந்த நகைகளை வாஸ்து விதிகளின் படி வைத்திருக்க வேண்டும். இதனால் அதன் பலன்களும் அதிகமாக கிடைக்கும்.
அந்த வகையில் வீட்டிலுள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற பெறுமதி வாய்ந்த பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சொத்துக்களை எந்த திசையில் வைக்க வேண்டும்?
1. தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற பெறுமதி வாய்ந்த பொருட்களை ரகசியமான இடத்தில் வைத்திருப்பது நல்லது. இது திருட்டு, கொள்ளையிலிருந்து எம்மையும் பொருளையும் காப்பாற்றும். அத்துடன் வீட்டில் விஷேசமான இடத்தில் வைப்பதால் மகிழ்ச்சியையும், செழுமையையும் அதிகரிக்கும்.
2. வீட்டில் வடக்குப் பகுதியில் பணத்தை வைப்பது நல்லது. ஏனெனின் பணத்தின் எடை குறைவாக இருப்பதால் இந்த திசையில் வைத்தால் நல்லது நடக்கும். வடக்கு திசையை நோக்கியவாறு அலுமாரி அல்லது லாக்கரை வைத்திருக்க வேண்டும்.
3. நிதி முன்னேற்றம், கௌரவம் ஆகியவை வீட்டில் சொத்துக்களை வாஸ்துப்படி கிழக்குப் பக்கம் வைக்க வேண்டும்.
4. விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை வீட்டில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வைக்கவும். தெற்கில் கனமான பொருட்களை வைப்பது மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.
5. லட்சுமியின் இருபுறமும் யானைகள் இருக்கும் வகையில் லட்சுமி சிலையை லாக்கரில் வைப்பது நல்லது. இது வீட்டிற்கு லட்சுமியின் வரவை அதிகப்படுத்தும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |