விநாயகர் சிலை வாங்க போறீங்களா?அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

By Sakthi Raj Sep 05, 2024 11:31 AM GMT
Report

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொண்டாட்டம் தான்.மேலும் கடைகளில் பல வண்ண நிறங்களான கலைநயத்துடன் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை விற்பனையும் அதிகம் பார்க்க முடியும்.

அப்படியாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகின்ற (7.09.2024)அன்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் பூஜைகளுடனும், வழிபாடுகளுடனும் கோலாகலமாக கொண்டாடப்படும்.மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வணங்கிய விநாயகரை தற்காலிகமாக வைத்து வழிபட்ட விநாயகரை ஆற்றில் சென்று கரைத்து விடுவார்கள்.

இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும்.அப்பொழுது அதிக மழையினால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஆற்றில் உள்ள மணலை அள்ளி எடுத்து சென்றுவிடும். அதனால் அந்த இடத்தில நீர், நிலத்தடியில் இறங்காமல் கடலில் சென்று கலந்து விடும்.

விநாயகர் சிலை வாங்க போறீங்களா?அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் | Vinayagar Chathurthi Silai Valipadu

அதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக காணப்படும். இதற்கு ஒரு யோசனையாகவும் ஒரு தீர்வாகவும் நம் முன்னோர்கள் நீர் ஆற்றில் தங்குவதற்கு கெட்டியான களிமண்ணை ஆற்றில் கரைத்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து ஆற்று நீரை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்று இதற்கொரு தீர்வு கண்டனர்.

அதனால் தான் குறிப்பிட்டு ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர். அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை செய்து வைத்து வணங்கி வழிபாடு செய்து விட்டு ஆற்றில் கரைத்து வந்துள்ளார்கள்.

தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும்

தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும்


மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒவ்வொருவர் வீட்டிலும் பல இடங்களிலும் களிமண்ணால் செய்த விநாயகரை வாங்கி வைத்து பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பழக்கத்தையும் கொண்டு வந்துள்ளனர்.

அப்படி நாம் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் பொழுது அந்த இடத்தில் நீர் பூமிக்குள் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும்.

விநாயகர் சிலை வாங்க போறீங்களா?அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் | Vinayagar Chathurthi Silai Valipadu

விநாயகர் சதுர்த்தி அன்று உருவாக்கப்படும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் ஆரம்பத்தில் ஈரப்பதமாக இருப்பதால் அதை அன்றே கரைத்தால் ஈரமான மண்ணும் ஆற்று நீரில் அடித்து செல்லப்படும் வாய்ப்புள்ளதால் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளில் சிலையின் மண் நன்றாக கெட்டியாகியிருக்கும்.

அதனால் அப்பொழுது கரைக்கும்போது மண் ஆற்றில் கரைந்து அப்படியே நீரில் அடியில் படிந்து விடும். அதனால் நீர் அந்த இடத்தில் தடுக்கப்பட்டு களிமண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடியில் தங்கிவிடும்.

அதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். மேலும் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும்.

இதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளனர்.அப்படி யாக விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் பொழுது கோலாகலமாக கொண்டாட்டமாக மக்கள் செய்வதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US