விநாயகர் சதுர்த்திக்கு தவறியும் இந்த சிலைகளை வாங்கி விடாதீர்கள்
விநாயகர் சதுர்த்தி இன்னும் சிறிது நாட்களில் வர இருக்கிறது. அந்த வகையில், பலரும் விநாயகர் சிலையை வாங்கி வழிபாடு செய்வது உண்டு.
அப்படியாக, விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை நாம் வாங்கும் பொழுது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பார்க்கின்ற எல்லா சிலைகளை வாங்க விட கூடாது. விநாயகர் சிலையை வாங்குவதற்கு ஒரு சில வழிமுறைகள் உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
1. அமர்ந்திருக்கக்கூடிய விநாயகரை மட்டுமே நாம் வாங்க வேண்டும். நின்று கொண்டிருக்கக்கூடிய விநாயகரை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

2. திருஷ்டி விநாயகர் கட்டாயமாக வாங்க கூடாது.
3. மேலும், விநாயகர் துதிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவதும் அவசியம்.
4. விநாயகரை சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வாங்குவது சிறப்பு.

5. முக்கியமாக விநாயகருடைய கைகளில் பிரசாதம் இருப்பது போல் சிலையை வாங்குவது நல்லது.
6. மூஷிக வாகனம் விநாயகர் பக்கத்தில் இருப்பது போலான சிலைகள் வாங்குவதையும் நன்மை அளிக்கும்.
காரணம் இவ்வாறான சிலைகளை வாங்குவதன் வழியாக நம்முடைய காரிய தடை விலகி, நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் விநாயகருடைய அருளால் செல்வ வளமும் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |