விரதங்களும் அதன் நன்மைகளும்
11 சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தடைகள் விலகி மனவலிமை அதிகரிக்கும்.
11 வாரம் முருகனை வழிபட்டு வெள்ளி அன்று விரதமிருக்க இழந்த சொத்து, பணம், பதவி கிடைக்கும்.
12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்தால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
ஐப்பசியில் கந்தசஷ்டி விரதம் (6 நாள்) இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
சனிப் பிரதோஷ விரதமிருந்தால் சிவன் கோயிலை ஐந்தாண்டு தரிசித்த பலன் கிடைக்கும்.
24 ஆண்டுகள் மகாசிவராத்திரி விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
மாதந்தோறும் மூன்றாம் பிறையை (சந்திர தரிசனம்) பார்த்தால் சிவனருள் கிடைக்கும்.
9 ஆண்டு நவராத்திரி விரதமிருந்தால் அம்பிகையின் அருளால் நினைத்தது நிறைவேறும்.
ஆனி வளர்பிறை ஏகாதசியன்று தண்ணீர் பருகாமல் விரதமிருப்பவர்கள் திருமாலின் திருவடியை அடைவர். ஓராண்டு ஏகாதசி விரதமிருந்த பலனை தரும்.
கும்பாபிஷேகத்தை தரிசித்தால் கோயிலை ஓராண்டு தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |