தவறியும் இந்த செடிகளை வீடுகளில் வளர்க்காதீர்கள்..பண பிரச்சனை வருமாம்
வாஸ்துரீதியாக நாம் எவ்வாறு ஒரு சில பொருட்களை வீடுகளில் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அதேபோல் வாஸ்து ரீதியாக ஒரு சில பொருட்களை வீடுகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதன் அடிப்படையில் சில செடிகள் வீடுகளில் வளர்க்கும் பொழுது நமக்கு எதிர்மறை விளைவுகளை கொடுக்ககூடும் என்றும் அதனால் பண பிரச்சனை வரும் என்று சொல்லப்படுகிறது. அவை என்ன செடிகள் என்று பார்ப்போம்.

வாஸ்து ரீதியாக வீடுகளில் நாம் சில செடிகளை வீடுகளை வளர்க்க கூடாது. மீறி வளர்க்கும் பொழுது நமக்கு எதிர்பாராத பிரச்சனைகளை கொடுக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அரச மரம் வீட்டு முன்பு இருப்பது கூடாது.
இது நம்முடைய வீட்டின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துவிடும். மேலும், போன்சாய் செடிகள் வீட்டு முன்பு வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. போன்சாய் மரங்கள் பார்ப்பதற்கு சின்னதாக இருப்பதால் வளர்ச்சியின் குறைந்த நிலையை அவை நமக்கு எடுத்துக்காட்டுவதால் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் அதை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதோடு தவறியும் வீட்டின் முன்பாக உலர்ந்த செடிகளை வைக்கக்கூடாது. இது நமக்கு தேவையில்லாத பிரச்சனைகளைஉண்டு செய்து விடும். அதாவது படிப்பு வேலை தொழில் போன்றவற்றுக்கு இவை மிகப்பெரிய தடைகளாக அமையும்.
இதை அதோடு வீட்டின் முன்போ அல்லது பின்பக்கமோ மொட்டை மாடியில் கூட அதை வளர்க்கக்கூடாது, இது வீட்டில் சண்டைகளை உருவாக்கி விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |