ஜோதிடத்தில் 8 ஆம் வீடு செல்லக்கூடிய மர்மமும் அதன் ரகசியமும் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் எட்டாம் வீடு ஆயுள் மற்றும் துர்ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. அதனால், இந்த இடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, இந்த எட்டாம் வீட்டில் எந்த கிரகம் அமைந்திருந்தால் அவர்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
ஒருவருக்கு எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் அதிக அளவில் பொய் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
செவ்வாய் பகவான் இருந்தால் எட்டாம் வீட்டில் இருந்தால் வீடு தொடர்பாக பிரச்சனைகள் இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க வேண்டிய நிலை வரும்.
8ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் தந்தையினுடைய காலத்திற்குப் பிறகு அவர்களின் வழி சொத்து இவர்கள் கைகளுக்கு வந்து சேரும்.

எட்டில் குரு பகவான் இருந்தால் சொத்து கட்டாயமாக இவர்களுக்கு வந்து சேரும். எட்டில் சுக்கிரன் இருந்தால் அம்மா கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.
எட்டில் சனி இருந்தால் இளமை வாழ்க்கை மிகவும் போராட்டமாக அமையக்கூடும். எட்டில் ராகு பகவான் இருந்தால் அப்பாவிற்கு நிலையான வேலை இருக்காது.
அதுவே, கேது பகவான் இருந்தால் அப்பாவிற்கு ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |