கோவிலில் கொடுக்கக்கூடிய மலர்களை என்ன செய்ய வேண்டும்?

By Sakthi Raj Aug 10, 2026 04:25 AM GMT
Report

  இந்த உலகத்தில் பலவகையான மலர்கள் இருக்கிறது. ஒவ்வொரு மலர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு இறைவனுக்கும் பிடித்த மலர்களும் உள்ளது. அதற்கு பின்னால் ஒரு புராண கதையும் உள்ளது. அந்த வகையில் நாம் சுவாமி வழிபாடு செய்கின்ற பொழுது கட்டாயமாக இறைவனுக்கு பூக்கள் வாங்கிக் கொண்டு செல்வது கொண்டு.

அதேபோல், பூஜை முடித்த பிறகு நமக்கும் பிரசாதமாக சில பூக்களை தருவார்கள். அப்படியாக, நமக்கு கொடுக்கக்கூடிய பூக்களை என்ன செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

கோவிலில் கொடுக்கக்கூடிய மலர்களை என்ன செய்ய வேண்டும்? | What To Do With Temple Flowers After Worship

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

ஆலயங்களில் நமக்கு தரக்கூடிய எல்லா மலர்களும் பிரசாதங்களும் நிர்மாலயம் என போற்றப்படுகிறது. நிர்மாலயம் என்றால் அழுக்கு அற்றது, தூய்மையானது என்று பொருள். அவற்றில் இறைவனின் அருட் சக்தி அதிகம் நிறைந்திருக்கும்.

அதனால் அவற்றை நாம் வெறும் மலராக பார்க்க கூடாது. பெண்கள் கோவிலில் கொடுக்கக்கூடிய மலர்களை வாங்கி அதை வணங்கி பிறகு அவர்களுடைய தலையில் வைத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் ஆலயத்தில் வாங்கக்கூடிய மலர்களை கோவிலுக்கு வெளியே வந்து தான் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ

செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ

கோவில்களில் பெரிய மாலை போன்றவற்றை தருகின்ற பொழுது வீட்டு பூஜை அறையில் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசைகளிலும் ஒரு தாம்பாளத்தில் மீது மலர்களை வைத்துவிடலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர் நிலைகளில் போட்டு விடுவதே சிறப்பு. 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US