வாஸ்து: படுக்கைறையில் கண்ணாடி வைத்தால் துரதிர்ஷ்டமா?
நம்முடைய வீடுகளில் வாஸ்து என்பது மிக முக்கியமான மற்றும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். அதாவது வாஸ்து சரியில்லை என்றால் வீடுகளில் நாம் பல்வேறு வகையான துன்பங்களை சந்திக்க நேரும். அந்த வகையில் எல்லாருடைய வீடுகளிலும் கட்டாயம் முகம் பார்க்கக்கூடிய கண்ணாடி இருக்கும்.
ஆனால் அந்த கண்ணாடியை நாம் எங்கு வைத்திருக்கிறோம் என்பதில் தான் வாஸ்து வேலை செய்கிறது. அப்படியாக, பெரும்பாலானோர் முகம் பார்க்கும் கண்ணாடியை அவர்களுடைய வசதிக்காக படுக்கையறையில் வைப்பதுண்டு. அவ்வாறு படுக்கைறையில் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கலாமா? கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.

படுக்கை அறை என்பது நாம் உறங்கும் இடம் தாண்டி அன்றைய நாளிற்காக நம்மை தயார் செய்துக்க கொள்ளக்கூடிய ஒரு இடம் ஆகவும் இருக்கிறது. அப்படியாக அங்கு நாம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கும் திசையை பொறுத்து நன்மை தீமையை வழங்குகிறது.
நாம் தவறான திசையில் கண்ணாடி வைக்கும் நேரத்தில் குடும்பங்களில் இருக்கக்கூடிய உறவுகள் இடையே சிக்கல்கள் உண்டாகும், திடீர் மனக்கசப்புகள் ஏற்பட்டு உறவுகளிடையே பிரிவு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.
மேலும் வாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடி அந்த அறையில் இருக்கக்கூடிய ஆற்றல்களை இரட்டிப்பாக கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. அதாவது ஒரு அறையில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் அந்த ஆற்றலை இரட்டிப்பாகவும், எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் அதையும் இரட்டிப்பாக கூடிய ஒரு தன்மையும் பெற்று இருக்கிறது.
ஆக, படுக்கை அறையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் அவை இன்னும் அதிகமாகி அவர்களிடையே மிகப்பெரிய ஒரு மனக்கசப்பை உண்டு செய்ய அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
ஆனால் சமயங்களில் போதுமான இட வசதியின்மை காரணமாகவும் படுக்கையறையில் முகம் பார்க்கக்கூடிய கண்ணாடியை வைக்க வேண்டிய நிலை வருகிறது. இவ்வாறான சூழலில் இருப்பவர்கள் கட்டாயம் அச்சம் கொள்ள தேவை இல்லை. வாஸ்துவில் எல்லா விஷயங்களுக்கும் தீர்வுகளும் பரிகாரங்களும் இருக்கிறது.

ஆக படுக்கை அறையில் வேறு வழி இன்றி முகம் பார்க்கக்கூடிய கண்ணாடியை வைக்கக்கூடிய நிலை இருந்தால் அவர்கள் படுப்பதற்கு முன்பாக அந்த கண்ணாடியை துணிக் கொண்டு மூடி விட வேண்டும், இதனால் நாம் உறங்கும் பொழுது கண்ணாடியின் ஆற்றல் செயல்படாது.
முடிந்தவரை கண்ணாடியை படுக்கையின் தலை அல்லது பக்கவாட்டில் வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். தூங்கும் பொழுது நம்முடைய முகம் ஆனது கண்ணாடியில் தெரியாமல் பார்த்துக் கொள்வது தான் மிக முக்கியமாக இருக்கிறது.
மேலும் கண்ணாடியானது எப்பவும் சுத்தமாக இருக்க வேண்டும். உடைந்த கண்ணாடிகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் கறைப்படிந்த கண்ணாடிகளையும் நம் வீடுகளில் வைக்க கூடாது. இவ்வாறான கண்ணாடிகள் நிச்சயம் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும்.
மேலும் கண்ணாடியை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. படுக்கையறைக்கு பதிலாக வரவேற்பு அறையில் கண்ணாடியை வைப்பது மிகச் சிறந்த பலனை கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் மறந்தும் கண்ணாடியை கதவு அல்லது ஜன்னல் முன்பாக வைக்க வேண்டாம். அவை வீடுகளில் உள்ள நல்ல சக்தியை வெளியேற்றும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |