2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்
மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமாக ராம அவதாரம் இருக்கிறது. ஸ்ரீ ராம அவதாரம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் நன்மையை காப்பாற்றுவதற்காகவும் எடுத்த அவதாரமாகும். ஆனால், ஸ்ரீ ராமபிரான் தர்மத்தையும் நீதியையும் வாழ்க்கையாகவே வாழ்ந்து காட்டி உதாரண புருஷராக இருந்தவர். அப்படியாக, ஒவ்வொரு மனிதனும் ஸ்ரீ ராமபிரானிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 6 குணங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக ஸ்ரீ ராமர் பிறந்தார். இவருடைய பிறப்பை போற்றிக் கொண்டாட கூடிய தினம் தான் ராமநவமி திருநாளாகும். இந்த 2026 ஆம் ஆண்டு ராமநவமி மார்ச் 26 அன்று கொண்டாடப்படவுள்ளது.
அவர் நம் வாழ்க்கையில் பொறுமை, தியாகம், சத்தியம், தர்மம் ஆகிய பாதையில் செல்வதால் நம்முடைய வாழ்க்கை எந்த நிலைகளிலும் கீழ் நிலைக்கு செல்லாது என்பதை வலியுறுத்தியவர்.
மேலும், ஸ்ரீ ராமபிரான் நல்ல அரசனாகவும், தலைவனாக, கணவனாக, நண்பனாக சகோதரனாக, மகனாக, வீரனாக எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார். அந்த வகையில் ஒவ்வொரு மனிதரும் ஸ்ரீ ராமபிரானிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான குணங்கள் பற்றி பார்ப்போம்.

1.ஸ்ரீ ராமர் தன்னுடைய வாழ்க்கையில் சத்தியத்தையும் நீதியையும் முழுமூச்சாக கடைபிடித்தார். எவ்வளவு பெரிய கடினமான சூழ்நிலை வந்தாலும் அவர் தன்னுடைய கண்ணியத்தை எந்த நேரத்திலும் கைவிடவில்லை.
2. ஸ்ரீ ராமபிரான் எல்லா உயிர்களையும் சமமாக பாவித்து அன்பு கருணை செலுத்தினார். சபரி எச்சில் செய்த கொடுத்த பழத்தையும் அவர் ஏற்றுக் கொண்டார். பாலர் குலத்தை தனது தோழர்களாக ஏற்றார். பறவையான ஜடாயுவுக்கு இறுதி சடங்கு செய்தார். இவ்வாறு மனிதநேயத்தையும் அன்பையும் கருணையும் சக உயிர்களுக்கு சமமாக கொடுத்து உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார்.
3. ஸ்ரீ ராமபிரான் எதிரிகளையும் கூட அவர்கள் ஒருநாள் திருந்துவார்கள் என்று ஒரு வாய்ப்பு கொடுத்தவர். ராவணன் உள்ளிட்ட பலருக்கும் அவர்கள் திறந்துவதற்காக வாய்ப்பு கொடுத்தார். யார் மீதும் எவர் மீதும் வெறுப்புக் காட்டாமல் வாழ்ந்தார்.
மன்னிப்பு என்பது பலவீனம் அல்ல அது ஒரு நல்ல பண்பு நமக்கு வலிமையை கொடுக்கக்கூடியது என்று உணர்த்தியவர். ஸ்ரீ ராமர் சொல்கிறார் அனைவரையும் மன்னிக்கும் பக்குவம் வந்துவிட்டால் மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள், வெறுப்புணர்வு, கோபம் பதற்றம் வகை இவை எல்லாம் இங்கு விடும் என்று நமக்கு உணர்த்தியவர்.

4. பட்டாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தவரை அழைத்து தந்தை வனவாசம் போக சொன்ன பொழுதும் கூட மனம் தளராமல் தைரியத்துடன் கிளம்பிச் சென்றார். அரண்மனை வாழ்க்கையை விட்டுவிட்டு காட்டில் வாழ வேண்டும் என்கின்ற நிலை ஏற்பட்ட பொழுதும் தன்னம்பிக்கையை இழக்காமல் வலிமையை விடாமல் இலக்குகளை அடைவதற்கு மன உறுதியோடு இருந்தவர். நம்மிடம் இருக்கக்கூடிய பொருட்களும் வசதி வாய்ப்புகளும் இன்று வரும் நாளை செல்லும் என்பதை உணர்ந்து எந்த நிலை வந்தாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும், வாழ வேண்டும் என்று காட்டியவர் ஸ்ரீ ராமர்.
5. ஸ்ரீ ராமபிரான் எல்லோருக்கும் அன்பும் மரியாதையும் செலுத்தினார். பெற்றோர்கள் மீது அன்பும் மரியாதையும் செலுத்துவதற்கு இன்றும் கூட ஸ்ரீ ராமபிரானை தான் வீடுகளில் பல பெற்றோர்கள் உதாரணமாக காட்டுகிறார்கள்.
தனது தந்தையின் வாக்குறுதலின் நிறைவேற்றுவதற்காக ராஜ வாழ்க்கையை துறந்து 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். ஸ்ரீ ராமர் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்தும் அவர்களுக்கு சேவை செய்யும் வணங்குவதற்கும் எடுத்துக்காட்டாக இருந்தவர் ஸ்ரீராமர்.
6. ஸ்ரீ ராமபிரான் தன்னுடைய வானர சேவைகளை கொண்டு மிகப்பெரிய ஜாம்பவானான இராவணனை வென்ற பொழுதும் அவர் தன்னுடைய வெற்றியை தனக்குரியது என்று சொல்லாமல் மற்றவர்களுக்கும் அதை பகிர்ந்து கொண்டார். மற்றவர்களையும் தன்னோடு சேர்த்து அரவணைத்து அவர்களையும் முன்னிறுத்தி செல்வதுதான் தலைவனுக்குரிய உணர்த்தினார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |