2025ல் திரும்பி பார்க்க வைத்த கும்பமேளா அடுத்து எப்பொழுது தெரியுமா?
உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு நிகழ்வு என்றால் அது 2025ஆம் ஆண்டு நடந்த கும்பமேளா என்றே சொல்லலாம்.பிரயாக்ராஜ் நடந்த கும்ப மேளாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்கள்,மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை புரிந்தனர்.அதாவது சாதாரண மக்கள் தொடங்கி அரசியல் பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள் என்று பலரும் இந்த கும்ப மேளாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த திருவிழாவில் புனித நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்று நம்பிக்கை. ஆதலால் தான் இந்த நிகழ்ச்சிக்கு அவ்வளவு பத்தர்கள் கூட்டம் திரண்டது.அப்படியாக இவ்வளவு சிறப்பாக நடந்து முடிந்த கும்ப மேளாவிற்கு பிறகு அடுத்த கும்ப மேளா எப்பொழுது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
ஏனென்றால் சிலரால் இந்த கும்பமேளாவில் பங்கேற்க முடியாமல் போனது தான்.இத்தனை சிறப்பு வாய்ந்த கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைன், நாசிக் ஆகிய புனிதத் தலங்களில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் பிரயாக்ராஜில் நடந்து முடிந்திருக்கும் மகா கும்பமேளாவில் சுமார் 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.அடுத்த கும்பமேளா 2027 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளா நாசிக்கில் நடைபெறவுள்ளது.
நாசிக்கில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் ஜூலை 17 ஆம் தேதி இந்த கும்பமேளா தொடங்கும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல கடந்த 2015 ஆம் ஆண்டு நாசிக்கில் நடைபெற்ற கும்பமேளா மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாசிக், உஜ்ஜைன் நகரங்கள்ல முழு கும்பமேளா நடைபெறும்.
ஹரித்வார், பிரயாக்ராஜ்ல 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்த கும்பமேளா நடைபெறும். இதனால், வரும் 2027ஆம் ஆண்டில் நாசிக்கில் கும்பமேளாவும், தொடர்ந்து 2028ஆம் ஆண்டு உஜ்ஜைனில் முழு கும்பமேளாவும் நடைபெறவுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது நடைபெற்ற பிரயாக்ராஜில் 2030ஆம் ஆண்டு கும்பமேளா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்க விஷயம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |