உங்கள் ராசி படி உங்களுக்கு எப்பொழுது திருப்புமுனை அமையும் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியின் அதிபதிகளுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் இருக்கிறது. அந்த வகையில் 12 ராசிகளுக்கும் தங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுது திடீர் திருப்பம் ஏற்படும் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இவர்கள் மற்றவர்களுக்காக ஓடுவதை நிறுத்திக் கொண்டு அவர்களுடைய தனி திறமையை நம்பி ஓட தொடங்கி விட்டால் வெற்றி நிச்சயம்.
ரிஷபம்:
இவர்கள் உங்களுடைய சௌகரியமான சூழ்நிலையை விட்டு வெளியே வந்து தங்களுடைய கனவுகளுக்காக ரிஸ்க் எடுக்க துவங்கும் பொழுது வெற்றிகள் தேடி வருகிறது.
மிதுனம்:
மனதில் உள்ள குழப்பங்களை விடுவித்து ஒரே ஒரு முடிவில் தெளிவாக இருந்து விட்டாலே வெற்றி நிச்சயம்.
கடகம்:
இவர்கள் மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதையும் முக்கியத்துவம் கொடுப்பது நிறுத்திவிட்டு இவர்களுக்காக நேரம் செலவிடும் பொழுது வாழ்க்கை மாறும்.
சிம்மம்:
இவர்கள் பெரிய தோல்விக்கு பிறகு இவர்களுடைய ஈகோவை விடுத்து எதையும் மாற்றி விடலாம் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஓடினால் மாற்றம் நிச்சயம்.
கன்னி:
இவர்கள் எல்லா விஷயங்களிலும் நேர்த்தியை எதிர்பார்க்காமல் சில நேரங்களில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறினால் வெற்றி நிச்சயம்.
துலாம்:
இவர்கள் மற்றவர்களுக்காக வாழ்வதை நிறுத்திவிட்டு இவர்களுக்காக சில முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது வாழ்க்கை மாறும்.
விருச்சிகம்:
இவர்கள் வாழ்க்கையில் நடந்த கசப்பான நினைவுகளை மறந்து விட்டு புதிய மனிதராக உருவெடுக்க தொடங்கினால் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.
தனுசு:
இவர்கள் பல நேரங்களில் எல்லா விஷயங்களையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பொறுப்பில்லாமல் செயல்படுவதை விட்டுவிட்டு பொறுப்போடு செயல்பட்டால் உங்களை தேடி வெற்றி வரும்.
மகரம்:
உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்திற்காக ஏங்குவதை விடுத்து உழைப்புகளில் அதிக கவனம் செலுத்தும் பொழுது வாழ்க்கை மாறும்.
கும்பம்:
இவர்கள் மனதில் நினைக்கக் கூடியதை செயல் ஆக்கும் பொழுது வெற்றிகள் இவர்களை தேடி வருகிறது.
மீனம்:
இவர்கள் மற்றவர்களை பற்றி கவலைப்படுவதை விடுவித்து இவர்களுக்காக கவலை அடைந்து செயல்படும்பொழுது வாழ்க்கையில் மாற்றங்கள் கிடைக்கும்.