வெள்ளி பொருட்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்?
வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எந்த திசையில், எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட உலோகத்தால் ஆனது என்றால், அதை வீட்டின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் வைத்தாலே அது நல்ல மாற்றத்தை எப்போதும் வழங்கும்.
அந்தவகையில் வீட்டில் வெள்ளி பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எந்த திசையில் வைக்கலாம்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி வெள்ளியின் நிறம் வெள்ளை. வெள்ளை நிறம் சந்திரனின் அடையாளமாக கருதப்படுகிறது.
வெள்ளியை ஆளும் கிரகம் சந்திரன். எனவே, வீட்டில் வெள்ளியை வைக்க சரியான இடம் சந்திரனின் திசையாக கருதப்படுகிறது.
சந்திரன் மேற்கில் உதித்து கிழக்கில் அமைகிறது. எந்த உலோகம் எந்த கிரகத்துடன் தொடர்புடையதோ, அந்த உலோகத்தை கிரகம் உதயமாகிய திசையில் வைத்திருப்பது நன்மையை எப்போதும் வழங்கும்.
வீட்டில் வெள்ளிப் பொருட்கள், நகைகள், பாத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் இருந்தால், அவற்றை வீட்டின் மேற்கு திசையில் வைக்கவும்.
அப்போதுதான் வெள்ளியின் நல்ல பலனை நிங்கள் பெற முடியும்.
வெள்ளிப் பொருட்களை எப்போதும் சிவப்பு துணியில் சுற்றி வைக்க வேண்டும். இதனால் ஜாதகத்தில் சந்திரனின் நிலை வலுப்பெற்று மன உளைச்சல் நீங்கும்.
மேலும் வெள்ளியை சிவப்புத் துணியில் கட்டி வீட்டில் மேற்கு திசையில் வைத்தால் வாழ்வில் சுப பலன்களை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |