இந்த கையில் வாட்ச் அணிவதால் தலையெழுத்தே மாறுமா?
மனிதர்களுக்கு நேரம் எனபது மிகவும் முக்கியமானதாகும்.அந்த நேரம் பார்ப்பதற்கு கைகளில் வாட்ச் அணிவதுண்டு.பெரும்பாலான மனிதர்கள் இடது கைகளில் தான் வாட்ச் அணிவார்கள்.ஒரு சிலர் தான் வலது கைகளில் வாட்ச் அணிவார்கள்.
அப்படியாக,எந்த கைகளில் வாட்ச் அணிவதால் என்ன பலன் என்று பார்ப்போம். பொதுவாக நாம் அணியும் அணிகலன்களுக்கு பின்னால் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.
அதில் இடது கையில் வாட்ச் அணிவது சந்திர சக்தியையும்,வலது கையில் சூரிய சக்தியையும் குறிக்கிறது.அதன் அடிப்படையில் நாம் அணியும் கைகளுக்கு ஏற்ப நம் பலன்கள் மாறுபடுகிறது.
இடது கையில் வாட்ச் அணிவதால் கிடைக்கும் பலன்கள்:
இடது கை மனிதனின் பெண்மை சக்தியை குறிக்கிறது. இது சந்திரன் மற்றும் நீரின் ஆற்றலை பிரதிபலிக்கிறது. அதனால் இடது கையில் வாட்ச் அணிந்தால்,கருணை மற்றும் அன்பு உருவாகும்.மன அமைதி கிடைக்கும்.இலக்கியம் மற்றும் கலை துறைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மனதில் நல்ல சிந்தனை வளரும்.
வலது கையில் வாட்ச் அணிவதால் கிடைக்கும் பலன்கள்:
வலது கை ஆண் சக்தியை குறிக்கிறது. இது சூரிய சக்தியுடன் தொடர்புடையது. அதனால் சூரிய பகவானுக்குரிய பண்புகள், பலன்களை தரும்.வலது கையில் வாட்ச் அணிவதால் தலைமை பண்பு அதிகாரிக்கும்.
வேலைகளில் வெற்றிகள் கிடைக்கும்.உங்களுடைய பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும்.அதிகார பதவி கிடைக்கும்.மனதில் தன்னம்பிக்கையும் வலிமையும் உண்டாகும்.
ஆக,ஆண்கள் பொதுவாக வலது கையில் அணிவது சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பெண்கள் இடது கையில் அணிவது சிறந்ததாக கருதப்படுகிறது. இருந்தாலும் ஜோதிடரிடம் ஆலோசித்து குரு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் அமைப்பை பொறுத்து மாற்றம் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |