ஒருவருக்கு நோய் தரக்கூடிய கிரகம் மற்றும் குணப்படுத்தக்கூடிய கிரகம் என்ன தெரியுமா?
ஜோதிட ரீதியாக நாம் ஒவ்வொரு கிரகங்கள் கொண்டு அந்த நபரின் வாழ்க்கை குண நலன்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, ஜோதிடத்தில் பெண் கிரகமாக இருக்கக்கூடிய சந்திரன் மட்டும் சுக்கிரன் ராகு இவர்கள் நோயை தரக்கூடிய கிரகமாக இருக்கிறார்கள்.
அதுவே வருகின்ற நோயை குணப்படுத்தக்கூடிய கிரகமாக ஆண் கிரகங்களாக இருக்கக்கூடிய சூரியன், செவ்வாய் குரு ஆகிய கிரகங்கள் இருக்கிறார்கள். இதிலிருந்து நம்முடைய ஆயுளை குறைக்கலாமா எடுக்கலாமா எனத் தீர்மானிக்கக்கூடிய கிரகங்களாக புதன் சனி கேது இருக்கிறார்கள்.

இங்கு நமக்கு ஆண் கிரகங்களாக இருக்கக்கூடிய சூரியன், செவ்வாய் குரு ஆகியவை நோயை ஏற்படுத்த மாட்டார்களா என்கின்ற ஒரு கேள்வி வரலாம். ஆனால், பெண் கிரகத்தால் வரக்கூடிய நோயை எளிதில் குணப்படுத்த முடியாது.
அதை போல் கேது கிரகம் அவர் காப்பாற்ற வேண்டும் அல்லவா? மருத்துவ கிரகம் தானே என்கின்ற கேள்வி வருவது நியாயம் தான் .கேது நிரந்தரமாக காப்பாற்ற மாட்டார் தற்காலிகமாக காப்பாற்ற கூடியவர்.

மேலும், சந்திரன், சுக்கிரன், ராகு இவை மூன்றும் பெண் கிரகங்களாக இருந்தாலும் இவை மூன்றுமே நீர் கிரகங்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. காரணம் பல நோய்களுக்கு மூலாதாரமே நீரிலிருந்து வரக்கூடியது தான்.
ஆகவே, ஜாதகத்தில் ஒருவருக்கு கேது பலம் பெற்றால் அம்மை நோய் ஏற்பட்டாலும் அவர்கள் விரைவில் குணமடைந்து விடுவார்கள். அதுவே அம்மை நோய் தாக்கி இறந்து போனவர்களும் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |