ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசியில் இருந்து மாறும்.
இதன்படி, நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் தன்னுடைய ராசியை மாற்றவுள்ளார். நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான், 2 வருடங்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவது வழக்கம். சனியும் சூரியனும் தந்தை மகனாக திகழ்ந்து வருகின்றனர்.
தற்போது சூரியன்- சனி பகவான் என இருவரும் மீன ராசியில் பயணம் செய்கிறார்கள். இந்த மாற்றம் எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இருக்கும்.
அதன் பின்னர் மேஷ ராசிக்கு சூரிய பகவான் செல்கின்றார். எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று சனி மற்றும் சூரியன் ஒருவருக்கொருவர் 30 டிகிரி கோணத்தில் இருப்பார்கள்.
இதன் விளைவாக “துவாதஷ் யோகம்” உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அந்த வகையில், சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சூரிய பெயர்ச்சியால் வரும் அதிர்ஷ்டம்
மிதுன ராசி | துவாதஷ் சுயோகத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நிதி நிலையில் சிறப்பானதொரு மாற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்தவித குறைவும் இருக்காது. மாறாக புதிய வருமானத்தின் ஆதாரங்கள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைப்பதால் நீங்கள் அடுத்தக்கட்டத்திற்கு செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். |
கடக ராசி | துவாதஷ் சோகம் கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, தொழிலில் எதிர்பாராத அளவுக்கு பலன்கள் கிடைக்கும். மற்றவர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வளவு காலம் நிலுவையில் இருந்த விடயங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். |
கும்ப ராசி | துவாதஷ் யோகம் தொழிலில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதிய தொழில் துவங்கும் பொழுது எதிர்பாராத வாய்ப்பு கிடைக்கும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வழக்கத்திற்கு மாறாக உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருப்பதால் தைரியம், தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடப்பது தான் உங்களுக்கு மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும். |
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |