6 கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதம் முதல் அதிர்ஷ்ட வலைக்குள் சிக்கும் ராசியினர் யார்?

By Sakthi Raj Apr 23, 2025 10:57 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. அப்படியாக கிரகங்களின் சுழற்சி 12 ராசிகளுக்கு நேர்மறையாகவும், எதிர்மறையான விளைவுகளையும் கொடுக்கும். அந்த வகையில் வரும் மே மாதம் 6 கிரகங்கள் தங்களுடைய இடத்தினை மாற்றுகின்றன.

அதாவது, சூரியன், புதன், குரு, ராகு-கேது மற்றும் சுக்கிரன் ஆகியோர் தங்கள் ராசிகளை மாற்றுகின்றனர். வரும் மே 14-ம் தேதி சூரியன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவான் மே 6-ம் தேதி மேஷத்தில் தனது ராசியையும், மே 14-ம் தேதி குரு மிதுனத்தில் தனது ராசியையும், மே 18-ம் தேதி ராகு-கேது தங்கள் ராசியையும், மே 31-ம் தேதி சுக்கிரன் மேஷ ராசியையும் மாற்றுகின்றனர்.

இவற்றுள் மிக முக்கியமான இரண்டு பெயர்ச்சிகள் குரு மற்றும் ராகு-கேதுவின் பெயர்ச்சிகளாகும். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ராகு கும்ப ராசியையும், கேது சிம்ம ராசியையும் அடைகின்றனர். இந்த மாதம், குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

இந்த கிரக மாற்றத்தால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலக செய்ய வேண்டிய 27 எளிய பரிகாரங்கள்

வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலக செய்ய வேண்டிய 27 எளிய பரிகாரங்கள்

ரிஷபம்:

மே மாதம் முதல் ரிஷப ராசியினருக்கு பொருளாதாரத்தில் அதிக நன்மைகள் உண்டாகிறது. இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய அலுவலகம் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

சிம்மம்:

மே மாதம் முதல் சிம்ம ராசிக்கு எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் யாவும் விலகும். சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும், சனியின் தாக்கத்தால், இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகமாக இருக்கலாம்.

துலாம்: 

துலாம் ராசிக்கு மே மாதம் முதல்  சுக்கிரன் உச்சம் பெறுவதால், குடும்பத்தில் நற்செய்திகள் வந்து சேரும். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் கிடைக்கும்.

மகரம்:

மே மாதம் முதல் மகர ராசிக்கு சூரியன் உச்ச ஸ்தானத்தில் நான்காவது வீட்டில் சஞ்சரிப்பதால், நிதி நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறுகள் விலகி செல்லும். குழந்தைகள் வழியாக பெற்றோர்கள் நற்செய்தி பெறுவார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US