2025:ஜனவரியில் இடம் மாறப்போகும் புதன்-பேச்சுக்களில் மிக கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
2025ஆம் ஆண்டு ஜனவரியில் புதன் வேறு ராசிக்கு சஞ்சரிக்க போகிறார்.இதனால் சில ராசிகளுக்கு கஷ்டமான காலம் ஏற்பட வாய்ப்புள்ளது.அதாவது புதன் கிரகம் ஜனவரி 18ஆம் தேதி அன்று தனுசு ராசியில் இருந்து விலக போகிறார்.
ஜனவரி 21 அன்று செவ்வாய் கிழமை புதன் மிதுன ராசியில் நுழைய போகிறார்.பிறகு ஜனவரி 24 2025ஆம் ஆண்டு புதன் கிரகம் சனியின் ராசி அடையாளமான மகர ராசியில் நுழைகிறார்.இதனால் எந்த ராசிக்காரர்கள் பேச்சுக்களில் மிக கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
மேஷம்:
புதனின் இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்கு மிக பெரிய சவாலாக அமையும்.சமூக ஊடகம் பயன் படுத்துபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.இல்லையெனில் தேவை அற்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும்.இந்த காலகட்டத்தில் எதிலும் நிதானம் கடைபிடிக்க வேண்டும்.மாணவர்கள் படிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும்.ஆரோக்கியத்தில் சில உபாதைகள் உண்டாகலாம்.கவனம் அவசியம்.
துலாம்:
சுக்கிரன் அதிபதியான துலாம் ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை கொடுக்க போகிறது.அதனால் இவர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த காலகட்டத்தில் புதிய ஒப்பந்தம் எதுவும் ஒப்புக்கொள்ள வேண்டாம்.இருந்தாலும் இவர்கள் பிறரிடம் பேசும் பொழுது மிக மிக கவனமாக பேசவேண்டும்.அதிலும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை வைத்துக்கொள்ளவில்லை என்றால் மிக பெரிய பாதிப்பு உண்டாக்கி விடும்.
கும்பம்:
கும்ப ராசிகாரர்கள் கடுமையான வாக்குவாதம் எதுவும் செய்யவேண்டாம்.அதிலும் கணவன் மனைவி அவர்கள் உறவுகளில் அடுத்த நபரின் பேச்சுக்களை கேட்காமல் இருந்தாலே போதும்.அலுவலகத்தில் நீங்கள் சவால்களை சந்திக்கக்கூடும்.நிதி ஆதாயம் சரியாக இருந்தாலும் செலவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.கலைத்துறையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முடிவுகளை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |