மனிதர்கள் ஒரு இயந்திரமா?கிருஷ்ணர் சொல்வது என்ன?
மனிதனானவன் கோபம்,மகிழ்ச்சி,பொறாமை,வெறுப்பு என்று அனைத்து குணங்கள் கொண்டவன்.அவன் வாழ்கையை இந்த குணங்கள் தான் தீர்மானிக்கிறது.அப்படியாக கிருஷ்ணர் ஒரு பக்தனை பார்த்து நீ என்ன இயந்திரமா ?என்று கேட்கிறார்?
அதற்கு அந்த பக்தன் என்ன சொல்கின்றான்?கிருஷ்ணர் அவனக்கு என்ன உணர்த்துகிறார் என்று பார்ப்போம்.
பக்தன்: கிருஷ்ணா?அவனை பாருங்கள்.அவன் என்னை எரிச்சல் அடைய வைக்கிறான். கோபமூட்டுகிறான் என்றான்.
கிருஷ்ணா :அப்படியென்றால் இனிமே உன்னை இயந்திரம் என்று கூறலாம் அல்லவா?
பக்தன்:என்ன கிருஷ்ணா?நான் இயந்திரமா?ஏன் இப்படி சொல்கிறீர்கள்?
கிருஷ்ணா:எவரோ ஒருவர் சுலபமாக அவர்களுக்கு ஏற்றார் போல் உன்னை இயக்கமுடிகிறது.நீயும் அவனுக்கு ஏற்றார் போல் இயங்குகிறாய்.உன் புத்தி அவன் முன் வேலை செய்யவில்லையே.அப்பொழுது நீ அவனின் இயந்திரம் தானே என்றார் கிருஷ்ணர்.
பக்தன்:கிருஷ்ணா!நான் அமைதியாகத்தான் இருந்தேன்.அவன் கோபமூட்டும்படி பேசுகிறான். நானும் எரிச்சலடைந்தேன் என்றான்.
கிருஷ்ணா:அப்படியென்றால்,அவன் உன்னை கோபமூட்டிருக்கிறான். நீயாக கோபமோ எரிச்சலோ அடையவில்லை. உன் மனதான இயந்திரத்தின் ஆளுமை அவன் கையில் இருக்கிறது. அவன் இயக்குக்குறான் நீ அடிமை போல் இயங்குகிறாய் என்பது சரிதானே.என்கிறார் கிருஷ்ணர்.
பக்தன் :ஆம் கிருஷ்ணா. உண்மை தான். நானாக கோபப்படவில்லை. அவன் பேசியதும் என் மனம் கோபம் கொண்டது. அவன் என்னுடைய கோபத்தை தூண்டுகிறான். நான் கோபமடைகிறேன். நான் எப்படி அவனின் தூண்டுதலுக்கு அடிமை ஆனேன் என்று தெரியவில்லையே. அந்த தருணத்தில் நான் நானாகவே இல்லை என்று உணர்கிறேன். வருந்துகிறேன் கிருஷ்ணா.
கிருஷ்ணா:அருமை. நீ கோபப்படும்போதோ, எரிச்சலடையும்போதோ நீ நீயாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டாய். அதுவே ஞானம்.அதே போல் இன்னோரு விஷயத்தையும் தெளிவு படுத்துகிறேன்.எவன் ஒருவன் அவனாக இருக்கிறானோ,அவனை யாராலும் எரிச்சலூட்டவோ,கோபப்படுத்தவோ முடியாது.
அவன் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பான்.அது தான் அவனின் உண்மை நிலை.அவன் உண்மை நிலையில் இருக்கும் பொழுது இந்த கிருஷ்ணனை மனதார உணரவும்,கண்களால் தரிசிக்கவும் முடியும்.ஆக நீ ஆனந்தமாக இருக்கவேண்டும் என்றால்,சுற்றி நடப்பவை எல்லாம் என்னால் நடக்கிறது என்று உணரு.அதுவே உன் வாழ்க்கை வசந்தமாக்கும் என்றார் கிருஷ்ணர்.
ஆக,நம்மில் பல பேர் இந்த பக்தனை போல் தான் இருக்கின்றோம்.யாரோ ஒருவர் சாதாரணமாக நம்மை எரிச்சல் அடைய செய்யவேண்டும் என்று நினைத்தால்,நாம் அவன் எண்ணியதை விட பலமடங்கு கோபமும் எரிச்சலும் அடைகின்றோம்.
அவன் நினைத்ததை சாதித்து விடுகின்றான்.நாம் அவன் ஆட்டி வைக்கும் பொம்மை ஆகிவிடுகின்றோம்.இவ்வாறு செய்யாமல் மனதை ஒருமுகம் படுத்தி எதற்கும் அசராமல் எல்லாம் அவன் செயல்,அவன் பார்த்துக்கொள்வான் என்று இருக்க நம்மை யாராலும் எளிதில் வீழ்த்தி விடமுடியாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |