ஜாதகத்தில் இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் கட்டாயம் காதல் தோல்வி அடையுமாம்
காதல் என்பது இந்த பிரபஞ்சத்தில் கட்டாயமாக ஒரு அற்புதமான உணர்வு தான். வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒருவர் மீது காதல் ஏற்பட்டு இருக்கும். ஆனால் இந்த காதல் என்பது அனைவருக்கும் கைகூடி வந்திருக்குமா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை. சிலருக்கு தோல்வியில் தான் காதல் முடிகிறது.
ஆனால், ஒரு சிலர் சில மாதங்கள் மட்டுமே ஒருவரை காதலித்து திருமணம் செய்திருப்பார்கள். அவர்களுடைய திருமண வாழ்க்கை வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கும். ஆனால் ஒரு சிலர் நீண்ட வருடமாக காதலித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் ஒரு சிறிய காரணத்திற்காக அவர்கள் அதை முறித்து விட்டு கடந்து செல்வதற்கான நிலையும் நாம் பார்க்க முடிகிறது.

இதற்கு கட்டாயமாக ஜாதகத்தில் அமைப்பும் காரணமாக இருக்கிறது. அப்படியாக எந்த அமைப்பு கொண்டவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால் கட்டாயமாக அவர்களுக்கு திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் முதலில் சில சிக்கல்களை கொடுத்து பிறகு அது சரியான நிலைக்கு செல்வதை நாம் காண முடிகிறது.
அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் பகவான் 2, 4, 7, 8, 12 ஆம் இடங்களில் இருக்க அந்த நபருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த செவ்வாய் தோஷம் என்பது முதலில் அவர்களுக்கு ஒரு சில தடைகளை கொடுத்து பிறகு ஒரு நிலையான ஒரு காதல் வாழ்க்கையை, திருமண பந்தத்தை கொடுக்கிறது.

ஆக ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இந்த இடங்களில் இருந்தால் அந்த நபருக்கு காதல் தோல்விகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் அது கட்டாயம் என்று இல்லை. அதை போல் பாக்கியஸ்தானம் என்று கருதக்கூடிய ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்து இருந்தாலும் அவை காதல் வாழ்க்கையில் ஒரு சில சிக்கல்களை கொடுத்து விடும்.
அதே நிலையில் ஐந்தாம் வீட்டில் பாதிப்புகள் இருந்தாலும் உறவுகள் இடையே பிரிவு போன்ற மன கசப்புகளை கொடுக்கிறது. அதைவிட முக்கியமாக ஒருவருக்கு நடக்கக்கூடிய ராகு கேது திசை புக்தி காலங்களில் மன ஓட்டங்கள் மிகவும் குழப்பமான நிலையில் இருப்பதால் தவறான நபரை காதலிக்க கூடிய அமைப்பு கொடுக்கிறது.
மேலும், ஒரு மனிதனுடைய மனதை குறிக்கக்கூடிய கிரகமாக சந்திரன் இருக்கிறார். இந்த சந்திர பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது பாவ கிரகங்களுடன் சேர்க்கை பெற்று இருந்தாலும் அவர்களுக்கு காதல் வாழ்க்கையில் சங்கடங்களை கொடுத்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |